»   »  ​ப்ரியங்கா நடிக்கும் ரீங்காரம்... ஜஸ்ட் 26 நாட்களில் படமான உண்மைச் சம்பவம்!

​ப்ரியங்கா நடிக்கும் ரீங்காரம்... ஜஸ்ட் 26 நாட்களில் படமான உண்மைச் சம்பவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கங்காரு, வந்தா மல படங்களில் நடித்த ப்ரியங்கா நடிக்கும் புதிய படம் ரீங்காரம். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை வெறும் 26 நாட்களில் படமாக்கியுள்ளனர்.

​ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ​ஸ்டூடியோ​ ​இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை புது இயக்குநர் சிவகார்த்திக் இயக்குகிறார். இவர் அரசு சுரேஷ், சமுத்திரக்கனி, மூர்த்தி, சிஜே பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர். இனியன் ஹரீஸ் ஒளிப்பதிவு செய்ய, இசையமைத்திருக்கிறார் அலி மெர்சா.

ப்ரியங்கா

ப்ரியங்கா

புதுமுகம் பாலா கதானாயகனாக நடிக்கிறார், 'கங்காரு', 'வந்தாமல' படங்களில் நடித்த பிரியங்கா ஹீரோயினாக நடித்துள்ளார்.

கலாபவன்மணி, ஆடுகளம் ஜெயபாலன், சிந்தியா, சிங்கப்பூர் தீபன், தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளனர்.

இயக்குநர் சிவகார்த்திக்

இயக்குநர் சிவகார்த்திக்

படம் பற்றி இயக்குனர் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, "ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ரீங்காரம் இருக்கு. அவரவர்களின் எண்ண அலைகளைத்தான் ரீங்காரம் என்கிறோம். மனசுக்குள்ள சந்தோஷப்படுகிற மாதிரியான நகைச்சுவையும், அடி மனசு வலிக்கிற மாதிரியான நிகழ்வுகளும், பார்த்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற அழகும், மறக்கவே முடியாத அமைதியும், கலையா மதிக்கிற காதலும் சரிவர கலந்து திரைக்கதையை மட்டுமே முழுமையா நம்பி பின்னப்பட்ட கதை ரீங்காரம்.

26 நாட்களில்

26 நாட்களில்

26 நாள்ல முழுப் படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம், இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. கதாநாயகனுக்கு 6 மாதம் நடிப்புப் பயிற்சி கொடுத்தோம்.. படம் முழுவதுமே வசன மொழி குறைவு, உடல் மொழி அதிகம், அதுக்காக அவரைத் தயார் செய்ய ஆறு மாசமாச்சு..

ப்ரியங்காவின் ஒத்துழைப்பு

ப்ரியங்காவின் ஒத்துழைப்பு

லெக்கின்ஸ் காலத்தில் கவர்ச்சியே இல்லாம படம் செய்வது மிகப்பெரிய சவால். ஆனால் நாங்க சென்சாருக்கு வேலையே இல்லாமல் அப்படியொரு படம் பண்ணிருக்கோம்ங்கிறது மிகப்பெரிய சந்தோஷம். நாயகி ப்ரியங்கா மிக இயல்பாக நடித்திருக்கிறார். படம் சீக்கிரம் முடிய எக்ஸ்ட்ரா டேக்கே வாங்காமல் இவர் நடித்துக் கொடுத்ததும் ஒரு முக்கிய காரணம்.

ரீங்காரத்தை ரசிப்பார்கள்

ரீங்காரத்தை ரசிப்பார்கள்

வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல... அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மள அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது... அந்த யூகிக்க முடியாத திசையோட ஒரு பக்கம்தான் ரீங்காரம். ரீங்காரம் வெற்றிக்கான அங்கீகாரமாக மக்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்," என்றார். ​

English summary
Reengaram is a new movie based on real life incidents with Priyanka in lead role directed by Sivakarthik.
Please Wait while comments are loading...