»   »  மனித உணர்வுகளின் “ரீங்காரம்”!

மனித உணர்வுகளின் “ரீங்காரம்”!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதர்களின் உணர்வுகளைப் பற்றி பேசும் ஒரு படம்தான் ரீங்காரம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஹரி இயக்கிய "சேவல்" வெற்றிப் படத்தை தயாரித்த ஜே.ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் "ரீங்காரம்".

இப்படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். ஒளிப்பதிவு இனியன் ஹரிஸ். இசை அலிமிர்ஷா.

“Reengaram” the film about human emotions

உண்மையானக் கதையாம்:

வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தினைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து படம் உருவாகியிருக்கிறதாம். படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா.

மொத்தமே இரண்டு பாடல்கள்:

இது ஒரு நாளில் நடக்கும் கதை. கதையின் விறு விறுப்புக்கும், வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே பாடல்கள்தானாம்.

நட்சத்திரப் பட்டாளம்:

பாலா என்கிற புதுமுகம் நாயகனாகவும், பிரியாங்கா நாயகியகாவும் நடித்துள்ளனர். கலாபவன் மணி, ஜெயபாலன் நடித்துள்ளனர். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார். சிங்கப்பூர் தீபன் காமெடியனாக நடித்துள்ளார்.

சிரிப்பும், அழுகையும்:

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை.

மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு:

இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன்.

இயல்பு மாறாத நடிப்பு:

ஒவ்வொருவரும் இயல்பு மீறாமல் யதார்த்தம் கெடாமல் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனாக புதுமுகம் பாலா. அவர் வேலையை சரியாக செய்து யதார்த்தத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இறுதிகட்ட பணியில்:

இதுவரை 25 நாட்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி பெரும்பகுதியை முடித்துள்ள இப்படக்குழுவினர், தற்போது இறுதிக்கட்டப் பணியில் இருக்கிறார்கள்.

English summary
“Reegaram” film fully made with human emotions; films director says about the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil