»   »  'நெஞ்சம் மறப்பதில்லை' ரெஜினாவுடன் ஜோடி சேர்ந்த அதர்வா!

'நெஞ்சம் மறப்பதில்லை' ரெஜினாவுடன் ஜோடி சேர்ந்த அதர்வா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ரெஜினாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் ரெஜினா பேயாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது.

Regina pair with Atharvaa in Gemini Ganesanum Surulirajanum

இந்நிலையில் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ரெஜினாவுக்குக் கிடைத்திருக்கிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஓடம் இளவரசு இயக்குகிறார். முன்னதாக மெட்ராஸ் கலையரசனை இப்படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருந்தனர்.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை தற்போது அதர்வாவை ஹீரோவாகவும், ரெஜினாவை ஹீரோயினாகவும் உறுதி செய்துள்ளனர்.

இப்படம் குறித்து ரெஜினா '' இந்தப் படத்தில் அதர்வாவின் ஜோடியாக நான் நடிக்கிறேன். இது ஒரு சுவாரஸ்யமான கதை. எனது முந்தைய படங்கள் மற்றும் கதாபாத்திரங்களிலிருந்து இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன்.

செப்டம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார். 2 ஹீரோயின் கதை என்பதால் இன்னொரு ஹீரோயினை படக்குழு தற்போது வலைவீசித் தேடி வருகிறதாம்.

English summary
After Nenjam Marappathillai now Regina pair with Atharvaa in His Next.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil