twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இது இன்னொரு போலீஸ் குரூப்...' கிளாமருக்கு பிரக்யா, காதலுக்கு ரெஜினா...சந்தீப் கிஷனின் அசுரவம்சம்!

    By
    |

    சென்னை: சந்தீப் கிஷன், ரெஜினா நடித்த தெலுங்கு படம் தமிழில் அசுரவம்சம் என்ற பெயரில் டப் ஆகிறது.

    தமிழில் யாருடா மகேஷ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சந்தீப் கிஷன். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமாகிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

    தெலுங்கிலும் ஹீரோவாக நடித்துவரும் சந்தீப், அடுத்து சி.வி.குமார் இயக்கி இருந்த மாயவன் படத்தில் நடித்திருந்தார்.

    அசுரவம்சம்

    அசுரவம்சம்

    இப்போது நரகாசுரன், கசடதபற படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் இந்தப் படங்கள் வெளியாக இருக்கின்றன. சந்தீப் கிஷன் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் நடித்து வெளியான படம், நட்சத்திரம். இதில் அவர் ஜோடியாக ரெஜினா காஸண்ட்ரா நடித்திருந்தார். இந்தப் படத்தை இப்போது, தமிழில் அசுர வம்சம் என்ற பெயரில் டப் செய்துள்ளனர்.

    பிரக்யா ஜெய்ஸ்வால்

    பிரக்யா ஜெய்ஸ்வால்

    லட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக வெங்கட்ராவ் மற்றும் எஸ் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக சேலம் பி சேகர் இணைந்து தயாரித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா, சாய் தருண் தேஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ஜே.டி சக்கரவர்த்தி உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் நரோஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ஏ.ஆர்.கே.ராஜராஜா

    ஏ.ஆர்.கே.ராஜராஜா

    கிருஷ்ண வம்சி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதி உள்ளார். இவர் பல மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தயாரித்தும் உள்ளார். இசை, பிம்ஸ் சிசிரோலேயோ. அழுத்தமான கதை அம்சத்தோடு கூடிய போலீஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்பவர்களுக்கு இந்தப் படம் ரசனையாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா.

    சமூகப் பிரச்னைகள்

    சமூகப் பிரச்னைகள்

    'கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிஷனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அதை கமிஷர் மகன் ஒரு பிரச்னையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்து விடுகிறது. இருந்தாலும் நிலைகுலையாத சந்தீப், காவல் துறை அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்னைகளை மாஸாக கையாள்கிறான்.

    கமிஷனர் மகன்

    கமிஷனர் மகன்

    ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் முக்கியமானப் பிரச்னைக்கு கமிஷனர் மகனே தலைமையாக இருப்பதைக் கண்டு ஆவேசமாகிறான். பிறகு கமிஷனர் மகனை எப்படி டீல் செய்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை எப்படி ஹீரோ எதிர்கொள்கிறான் என்பதும்தான் படத்தின் கதை. இதன் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் ராஜராஜா.

    English summary
    Sundeep Kishan and Regina Cassandra are equally popular in Telugu and Tamil film industries. Their telugu film Natchathiram to be dubbed into tamil, titled asuravamsam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X