»   »  கமலுக்கு மட்டும் ‘முத்தம்’ கொடுத்தாங்க... எனக்குத் தரலையே... ரேகா மீது பவர் வருத்தம்!

கமலுக்கு மட்டும் ‘முத்தம்’ கொடுத்தாங்க... எனக்குத் தரலையே... ரேகா மீது பவர் வருத்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சில பேரைப் பார்த்தால் தான் சிரிப்பு வரும், ஆனால், சிலர் பேரைக் கேட்டாலே சிரிப்பு சிரிப்பாய் வரும். பவர் ஸ்டார் சீனிவாசன் இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

பிரேம்ஜி நாயகனாக நடித்து வரும் மாங்கா பட விழாவில் கலந்து கொண்ட பவர்ஸ்டார் தனது முதல்பட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர் பேசியதைக் கேட்ட "பழம்பெரும்" நடிகை ரேகா தனது பேச்சை முடித்துக் கொண்டு வேகமாக போய் விட்டார். பவர் பேச்சிலிருந்து....

எனக்கு ஜோடி...

எனக்கு ஜோடி...

நான் சினிமால நடிக்க வந்த புதில் எனக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் பேசி பார்த்தேன். நிறைய பேர் மறுத்துவிட்டார்கள். பிறகு அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகையை முயற்சி செய்கையில், ‘இவர்கூடவெல்லாம் நான் நடிக்கிறதா.. முடியாது'ன்னு சொல்லிட்டாங்க.

ரேகா...

ரேகா...

அப்புறம் ரேகாவை கேட்கலாம்னு சொன்னாங்க. ‘புன்னகை மன்னன்'ல கமல்கூட ஜோடியா நடிச்சவங்களாச்சே.. நம்மகூட நடிச்சா நமக்கும் ஒரு கெத்தா இருக்கும். பெருமையா இருக்குமேன்னு நினைச்சு போய்க் கேட்டோம். ‘சரி'ன்னு சொல்லிட்டாங்க.

டூயட் கூட உண்டு...

டூயட் கூட உண்டு...

எங்களுக்கு ஒரு டூயட் பாடல் கூட இருந்துச்சு. ‘புன்னகை மன்னன்' படத்துல வர்ற அந்த பாட்டு மாதிரியே ஒரு டூயட் பாடல் வைச்சு அதை சூட் பண்ணினோம். எப்படியோ நாம அவங்ககூட நடிக்கிறோம்.

வட போச்சே...

வட போச்சே...

அவங்க கமலுக்குக் கொடுத்த மாதிரியே நமக்கும் ஒரு முத்தம் கொடுப்பாங்கன்னு நானும் ரொம்ப ஆசையா எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். ஆனா கடைசிவரைக்கும் அவங்க முத்தம் கொடுக்கவே இல்லை. அந்தப் படமும் ரிலீஸாவில்லை" என்றார்.

அருகிலேயே ரேகா....

அருகிலேயே ரேகா....

இதில், வேடிக்கையான விசயம் இந்த விழாவில் ரேகாவும் கலந்து கொண்டது தான். ரேகாவை அருகிலேயே வைத்துக் கொண்டு தான், பவர் முத்த விவகாரங்களையெல்லாம் பேசினார். பவர் பேசப்பேச சங்கடத்தில் நெளிந்த ரேகா, விழாவில் தான் பேசியதும் விருட்டென்று வெளியேறி விட்டார்.

English summary
The actor Powerstar Srinivsan has said that actress Rekha had disappointed him by not giving kiss.
Please Wait while comments are loading...