»   »  சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல் ஹாஸன் நினைவு தான் வருது: டிவி நடிகை

சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல் ஹாஸன் நினைவு தான் வருது: டிவி நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சில்க் ஸ்மிதாவின் பெயரை கேட்டாலே கமல் ஹாஸன் நினைவு வருவதாக தொலைக்காட்சி நடிகை ரேகா ரதீஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தற்கொலை செய்து கொண்ட அவரின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் பாலிவுட்டில் படமாக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்தது அனைவருக்கும் தெரியும்.

சில்க்

சில்க்

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ரேகா ரதீஷ். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா பற்றி பேசியுள்ளார்.

கமல்

கமல்

சில்க் ஸ்மிதாவின் பெயரை கேட்டாலே எனக்கு தமிழ் திரையுலகில் கமல் ஹாஸன் தான் நினைவுக்கு வருகிறார். அவரும், சில்கும் சேர்ந்து ஆடிய பொன் மேனி உருகுதே பாடலை மறக்க முடியுமா என்கிறார் ரேகா.

மோகன்லால்

மோகன்லால்

சில்க் ஸ்மிதாவின் பெயரை கேட்கும்போது எல்லாம் மலையாள திரையுலகில் மோகன்லாலின் நினைவு தான் வரும். ஸ்படிகம் படத்தில் அவர்கள் சேர்ந்து ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்கள் என்று ரேகா தெரிவித்துள்ளார்.

ரேகா

ரேகா

சில்க் ஸ்மிதாவின் பெயரை கேட்டால் மோகன்லால் மற்றும் உலக நாயகன் கமல் ஹாஸனின் நினைவு வருவதாக ரேகா ரதீஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Rekha Ratheesh, a Malayalam TV serial artist has got the attention of many by saying that she thinks of Kamal Haasan while hearing Silk Smitha's name.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil