»   »  இன்று ஆயுத பூஜை ஸ்பெஷல் ரிலீஸ்... தேவி, ரெமோ, றெக்க!

இன்று ஆயுத பூஜை ஸ்பெஷல் ரிலீஸ்... தேவி, ரெமோ, றெக்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை மூன்று குறிப்பிடத்தக்க படங்கள் வெளியாகியுள்ளன. மூன்றுமே கிட்டத்தட்ட சம அந்தஸ்துள்ள படங்கள்தான்.

அவை தேவி, ரெமோ, றெக்க.


தேவி


பிரபு தேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம் தேவி. அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தை பிரபு தேவா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இந்தப் படம்தான்.


Rekka, Remo, Devi releasing today

ஹாரர் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், சற்றே ஓய்ந்துள்ள பேய்ப்பட சீசனை உயிர்ப்பிக்குமா..? பார்க்கலாம்.


ரெமோ


Rekka, Remo, Devi releasing today

சிவகார்த்திகேயன், மிகவும் புரமோட் செய்யப்பட்ட படம் இந்த ரெமோ. கீர்த்தி சுரேஷ், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். பிரமாதமான ஓபனிங்குடன் வெளியாகியுள்ளது இந்தப் படம்.


றெக்க


Rekka, Remo, Devi releasing today

இந்த ஆண்டில் வெளியாகும் ஏழாவது விஜய் சேதுபதி படம் றெக்க. இந்தப் படத்தை ரத்னசிவா இயக்கியுள்ளார். லட்சுமி மேனன்தான் நாயகி. விஜய் சேதுபதியின் நண்பர் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியின் வெற்றி இந்தப் படத்திலும் தொடருமா... பார்க்கலாம்.

English summary
Today Friday there are 3 movies Remo, Devi, Rekka are releasing as Pooja special.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil