»   »  காதலர் தினம் முடிந்த பிறகு... ‘காதலும் கடந்து போகும்’!

காதலர் தினம் முடிந்த பிறகு... ‘காதலும் கடந்து போகும்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள காதலும் கடந்து போகும் படம் மார்ச் 11ம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேதுபதி, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், காதலும் கடந்து போகும் என கைநிறைய படங்களுடன் உள்ளார் விஜய் சேதுபதி. சேதுபதி படத்தில் முதன்முறையாக போலீசாக நடித்துள்ளார் அவர். இப்படம் வரும் 19ம் தேதி ரிலீசாக உள்ளது.


இந்நிலையில், அதற்கு முன்னதாக வரும் வெள்ளியன்று அதாவது பிப்ரவரி 12ம் தேதி காதலும் கடந்து போகும் படம் ரிலீசாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.


காதலர் தினம்...

காதலர் தினம்...

அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைப்பிலேயே காதல் பேசும் இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


தள்ளி வைப்பு...

தள்ளி வைப்பு...

ஆனால், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


விஜய் சேதுபதி...

விஜய் சேதுபதி...

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரேமம் பட நாயகி மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நலன்குமாரசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


யு சான்றிதழ்...

யு சான்றிதழ்...

சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.


English summary
According to the latest reports, ‘Kadhalum Kadanthu Pogum’ is planned to release on 11th March, 2016. The shooting of the film is completed fully and the producers are delaying the release as the character of Vijay Sethupathi is similar to that of ‘Naanum Rowdy Than’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil