twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று வெளியாக இருந்த வானவராயன் வல்லவராயன் படத்துக்கு இடைக்கால தடை!

    By Mathi
    |

    சென்னை: நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள வானவராயன்-வல்லவராயன் படத்தை வெளியிடுவதற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    நடிகர்கள் கிருஷ்ணா, மோனல் காஜல், ஆனந்த், சந்தானம், எஸ்.பி.பி.சரண், கோவை சரளா, தம்பிராமைய்யா உட்பட பலர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்' திரைப்படத்தை மகாலட்சுமி மூவிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.மதுபாலா தயாரித்துள்ளார்.

    (வானவராயன் வல்லவராயன் படங்கள்)

    காப்புரிமை

    காப்புரிமை

    இவர், இந்த படத்தின் காப்புரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக கூறி பல்வேறு தேதிகளில் ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த மே 5-ந் தேதி நடந்தது.

    வேறு நிறுவனங்களுக்கு விற்பனை

    வேறு நிறுவனங்களுக்கு விற்பனை

    இந்த நிகழ்ச்சிக்கு பெரும் தொகை செலவு செய்தோம். இதன்பின்னர், கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில், வானவராயன் வல்லவராயன் படத்தின் உரிமத்தை வேறு சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது தெரியவந்தது.

    ரூ25 லட்சம்தான் கொடுத்தனர்..

    ரூ25 லட்சம்தான் கொடுத்தனர்..

    இதையடுத்து, மகாலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணத்தை திருப்பிக்கேட்டோம். அவருக்கு எதிராக போலீசிலும் புகார் செய்தோம். இதையடுத்து ரூ.25 லட்சம் மட்டும் திருப்பிக்கொடுத்தனர். ரூ.85 லட்சம் இதுவரை திருப்பித்தரவில்லை.

    கணவர் மரணம்

    கணவர் மரணம்

    இதற்கிடையில், இவர்கள் செய்த இந்த மோசடியை தாங்கிக்கொள்ள முடியாமல் என் கணவர் சுரேஷ் சத்தியா மாரடைப்பால் இறந்துவிட்டார்.

    இன்று வெளியீடு

    இன்று வெளியீடு

    இந்த சூழ்நிலையில், எங்களுக்கு தரவேண்டிய ரூ.85 லட்சத்தை தராமல், வானவராயன் வல்லவராயன் படத்தை செப்டம்பர் 12-ந் தேதி திரையிட முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    முகாந்திரம் உண்டு

    முகாந்திரம் உண்டு

    இந்த மனு நீதிபதி ஆர்.கோவிந்தராஜன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன். எனவே, வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன்.

    பணத்தைக் கொடுத்துவிட்டு படம் வெளியிடலாம்

    பணத்தைக் கொடுத்துவிட்டு படம் வெளியிடலாம்

    ஒருவேளை மனுதாரருக்கு தரவேண்டிய தொகையை எதிர்மனுதாரர் கொடுத்துவிட்டால், படத்தை அவர்கள் வெளியிடலாம் என்று கூறியுள்ளார்.

    English summary
    A day before the release of a Tamil film, Vanavarayan Vallavarayan starring Kreshna, Monal Gajjal, Anand, and leading comedy actor Santhanam, a city civil court in Chennai stayed its release on Thursday till September 18.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X