twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிலையன்ஸ் ஜியோவின் சூப்பர் திட்டம்- புதுப்படங்கள் முதல் நாள் முதல் ஷோ இனி வீட்டிலிருந்தே பார்க்கலாம்

    |

    சென்னை: தொலைத் தொடர்பு சேவையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ தற்போது புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி புதிய படங்களை முதல் நாள் முதல் ஷோவை வீட்டிலிருந்தே பார்க்க முடியும்.

    என்னது உங்ககிட்ட ஸ்மார்ட் ஃபோன் இல்லையா? என்கிற அளவுக்கு ஸ்மார்ட் போன் இல்லாதவங்கள விரல் விட்டு எண்ணிரலாம். ஆறாவது விரல் போல் ஒருவரின் கையோடு ஒன்றியே இருக்கும். செல்போன் இருந்தால் அதில் இன்டர்நெட் இல்லாமலா.

    Reliance Jio Introduce new Scheme

    எப்ப பாத்தாலும் ஆன்லைனில் இருப்பது தான் இன்றைய ட்ரெண்டிங். வாட்ஸ்அப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யுடியூப் என எல்லாத்தையும் உடனுக்குடனே செக் செய்து பதில் அனுப்பனும்னா கண்டிப்பா 4G சேவை ரொம்ப அவசியம். அந்த சேவையை இடையில்லாமலும் குறைந்த மாத சப்ஸ்கிரிப்ஸனிலும் (subscription) வழங்குவது நம்ம ஜியோ மட்டுந்தாங்க.

    அது மட்டுமில்லாம இலவச கால்கள், இலவச ஜியோ டிவி, ஒரு நாளைக்கு அதிக பட்சமா இன்டர்நெட் டேட்டா என வாடிக்கையாளர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் தந்து, வாடிக்கையாளர்களை தங்கள் கைவசம் வைத்துள்ளது ஜியோ நிறுவனம்.

    அது மட்டுமில்லாம மேலும் மேலும் புதிய அருமையான திட்டங்களை கொடுத்துக்கிட்டே இருக்காங்க. அந்த வகையில ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்தர கூட்டத்தில் புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானி.

    இதுவரை 2.9 கோடி வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியின் வளர்ச்சியில் ரிலையன்ஸின் முக்கிய பங்களிப்பு, ஜியோ ஃபைபர் சேவை, ஜியோ ஃப்ரஸ்ட் டே ஃப்ரஸ்ட் ஷோ திட்டம் மூலம் இந்தியாவில் வெளியாகும் ஒரு புதிய திரைப்படத்தை ஜியோ ஃபைபர் சேவை மூலம் உங்கள் வீட்டிலிருந்தே பார்க்க கூடிய வசதியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    Reliance Jio Introduce new Scheme

    இந்த சேவையை ஜியோ நிறுவனமே முதலில் அறிமுகம் செய்துள்ளதால் அதற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல விதமான புதிய திட்டங்களுடன் வெளிவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்புகளால் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பில் மேலும் கூடுதல் வாடிக்கையாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    70 மற்றும் 80ஆம் ஆண்டுகளின் காலத்தில் திரைப்படம் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் வரும். மக்கள் அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்ப்பார்கள். அதன் பின்னர் திரைப்படத்தின் எண்ணிக்கை அதிகமான போது மக்களின் கவனம் (ரசிகர்களிடையே) அவரகளுக்கு பிடித்த கதாநாயகன் மற்றும் கதாநாயகி நடிக்கும் திரைப்படத்திற்கு முக்கியதுவம் கொடுத்தனர்.

    அதன் பிறகு இப்பொழுது ரசிகர்கள் நல்ல திரைக்கதை உள்ள படங்களை மட்டும் விரும்பி திரையங்களுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். முகேஷ் அம்பானி கொண்டு வந்த இந்த புதிய திட்டத்தை திரையினர் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இது திரைத்துறையினருக்கு லாபகரமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இப்பொழுது ஜியோ உரிமையாளரான முகேஷ் அம்பானி கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தின் படி, திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி சந்தாவின் கீழ், சந்தாதாரர்கள் வீட்டிலிருந்தபடியே புதிய திரைப்படத்தைப் பார்க்க முடியும். வரும் 2020 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

    Read more about: tamil cinema online
    English summary
    Reliance Jio now introduces new scheme for their subscribers. In that new scheme, Jio prime subscribers can watch first day first show of new released movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X