»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கன்னடத் திரையுலகில் சமீப காலமாக தமிழ்ப் படங்களை ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது.

கடும் கதைப்பஞ்சம் நிலவுதுதான் இதற்கு காரணமாம். கதை மட்டுமல்ல ரீரிக்கார்டிங், பாடல்கள் என தமிழ்படங்களை காப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ்ப் படங்களை அப்படியே அச்சரம் பிசகாமல் கன்னட நடிகர்களைப் போட்டு எடுத்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் தமிழல் சூப்பர் ஹிட்டான அஜித்தின் "அமர்க்களம்" படத்தை கன்னடத்தில் "அசுரா" என்றுஎடுத்துள்ளார்கள். நடகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார்தான் ஹீரோ. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்பாடலை இவரும் கடும்பாறைகளின் மேலும் கீழும் தாவித் தாவி ஆக்ரோசமாகப் பாடுகிறார்.

இதேபோல தமிழ் திரையுலகுக்குப் பெருமை தந்த விக்ரம் நடித்த "சேது" படமும் "ஹூச்சா" என்ற பெயரில் அதிகசிரமமின்றி ரீமேக் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
அதே போல வானத்தைப் போல படத்தையும் கன்னட சூப்பர் நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து எஜமானா என்றபெயரில் எடுத்துவிட்டார்கள்.

இன்னொரு விஷயம் தெலுங்கு மக்களும் இதில் சளைத்தவர்களல்ல.

Read more about: films, hero, heroins, movies, music, songs, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil