twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொறாமையில் வாரிசு நடிகரை குத்திக் காட்டுகிறாரா விஜய் தேவரகொண்டா?

    By Siva
    |

    ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா மனதில் பட்டதை வெளிப்படையாக கூற அதை கேட்டு ஆளாளுக்கு வேறு விதமாக பேசுகிறார்கள்.

    விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை ஷாஹித் கபூரை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டியே கபிர் சிங்கையும் இயக்கினார்.

    Remakes: Vijay Deverakonda gets criticised

    கபிர் சிங் படம் அர்ஜுன் ரெட்டியை விட பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி வெளியான கபிர் சிங் இதுவரை ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது. இதே வேகத்தில் போனால் அந்த படம் விரைவில் ரூ. 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஷாஹித் கபூரின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக கபிர் சிங் அமைந்துள்ளது. இந்நிலையில் கபிர் சிங் படத்தை பார்த்தீர்களா, எப்படி இருக்கிறது என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், கபிர் சிங் ரிலீஸான போது நான் வெளிநாட்டில் இருந்தேன். நாடு திரும்பியதும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    என்ன சேரன், இப்படி பண்ணிட்டீங்க: அந்த தங்கத்தையும், செல்லத்தையும் நாமினேட் செய்யலாமா? என்ன சேரன், இப்படி பண்ணிட்டீங்க: அந்த தங்கத்தையும், செல்லத்தையும் நாமினேட் செய்யலாமா?

    இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் ஒரிஜினல் கதையை வைத்து சந்தீப், ஷாஹித் ஆகியோர் என்ன செய்துள்ளார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். நான் ஒருபோதும் ரீமேக் படத்தில் நடிக்க மாட்டேன். கபிர் சிங் படத்தில் நடிக்குமாறு யாரும் என்னை அழைக்கவில்லை என்றார்.

    விஜய் தேவரகொண்டாவின் பேட்டியை பார்த்தவர்கள் கபிர் சிங் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அவர் கடுப்பில் ஷாஹித் கபூரை குத்திக்காட்டி பேசுகிறார் என்று அவர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ரீமேக் படத்தில் நடித்தால் ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களுடன் ரசிகர்கள் ஒப்பிடுவார்கள். ஒரு வேளை அந்த ஒப்பீடு எல்லாம் தேவையில்லை என்று நினைத்து விஜய் தேவரகொண்டா அப்படி சொல்லியிருக்கலாம்.

    அவர் வெளிப்படையாக பேச அதை தவறாக புரிந்து கொண்டு விமர்சிக்கிறார்கள். முன்னதாக அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறோம் என்று அறிவிப்பு வெளியானபோது யாராலும் விஜய் தேவரகொண்டா மாதிரி நடிக்க முடியாது, இது வீண் முயற்சி என்று விமர்சனம் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijay Deverakonda is getting criticised after he said that he won't act in any remakes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X