TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
365 "சுந்தரி"களுடன் சுந்தர் ராமு!
சென்னை: சுந்தர் ராமுவை நினைவிருக்கிறதா.. மறந்து விட்டீர்களா.. அப்படியே ரீவைண்ட் போங்கள்.. மயக்கம் என்ன, 3 படத்தில் நடித்தாரே.. அவரேதான். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா.. வேறென்ன டேட்டிங்கில் படு பிசியாக இருக்கிறாராம் மனிதர்.
டேட்டிங் என்றதும் தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். இது போட்டோ எடுப்பதற்கான டேட்டிங். ஆனால் மனிதர் அதிலும் ஒரு சாதனையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாராம்.
அதாவது இந்த வருடத்தின் 365 நாட்களில் 365 பேருடன் புகைப்படங்களுக்காக செலவிடத் திட்டமிட்டுள்ளாராம். இது சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் மனிதர் போகிற வேகத்தைப் பார்த்தால் சாத்தியமாகி விடும் போலத்தான் தெரிகிறது.
பன்முகம்...
நாடக நடிகர், புகைப்படக் கலைஞர், பேஷன் போட்டோகிராபர், சினிமா நடிகர் என பல முகம் கொண்டவர் சுந்தர் ராமு.
நடிப்பு...
இயக்குநர் செல்வராகவனிடம் இவர் நட்பு கொள்ள அது இவரை சினிமாவிற்கும் கொண்டு வந்தது. மயக்கம் என்ன, 3 என இரு படங்களில் இவரது நடிப்பும் பேசப்பட்டது.
புகைப்படக் கலைஞர்...
நான் சிகப்பு மனிதன் படத்தில்தான் கடைசியாக நடித்தார். அதன் பின்னர் முழு நேரத்தையும் தற்போது புகைப்படங்களுக்காக செலவிட்டு வருகிறார்.
கிசுகிசு...
இடையில் மயக்கம் என்ன பட நாயகி ரிச்சா கங்கோபாத்யாவுடன் கிசுகிசு, ஆண்ட்ரியாவுடன் கிசு கிசு என சிக்கினார். ஆனால் இரண்டையும் அவர்கள் மறுத்தனர்.
பெண்கள் மட்டும்...
இப்போது விதம் விதமான புகைப்படங்களையும், ஆல்பங்களையும் தயாரித்து வருகிறார். இதற்காக பெண்களை மட்டும் கான்செப்ட்டாக எடுத்துக் கொண்டு படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறாராம்.
இலக்கு...
இந்த ஆண்டில் 365 பேருடன் பணியாற்றப் போவதாக சபதம் எடுத்த அவர் அந்த இலக்கை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருக்கிறார். இதனால் இவரை சக கலைஞர்கள் சரியான பெண் பித்தரா இருப்பார் போலயே என்று கிண்டலடித்து வருகின்றனராம்.
110 பெண்கள்...
இதுவரை 110 பெண்களுடன் இணைந்து பணியாற்றி விட்டாராம் சுந்தர் ராமு. இதுவரை அவர் இணைந்து பணியாற்றிய பெண்களில் மிகவும் இளம் வயதுக்காரர் 21 வயதுப் பெண்ணாம். அதிக வயதானவர் 105 வயது பாட்டியாம்.
கேமரா பார்வை...
தனது டார்க்கெட்டை பூர்த்தி செய்வதற்காக காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருக்கிறாராம் சுந்தர் ராமு. தான் சந்திக்கும் பெண்களையெல்லாம் தனது இலக்குக்கு சரிப்பட்டு வருவாரா என்று கேமரா பார்வைப் பார்க்கவும் தவறுவதில்லையாம்.
இன்னும் என்னென்ன கிசுகிசுக்கள் வரப் போகிறதோ.