twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலத்தால் என்றும் அழியாத பொக்கிஷம் பாலுமகேந்திரா.. பிறந்த தினம் இன்று !

    |

    சென்னை : உலகின் அற்புதமான விஷயங்களில் கலை ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. எம்.ஆர்.ராதா சொன்னது போல் 'மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா கலை' இந்த வரிகளுக்கேற்ப தன் சினிமா வாழ்க்கை முழுவதையும் அற்பணித்தவர் பாலுமகேந்திரா. தன் திரைபயணத்தில் 23 படங்கள் மட்டுமே எடுத்தாலும் ஒரு உண்மையான கலைஞன் என்ற பெயர் எப்பொழுதும் இருக்கும்.

    சினிமாவை எப்போதும் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் இவர், எதார்த்தமான சினிமாவை மட்டுமே எடுத்திருப்பார் ஊரை காக்கும் ஹீரோக்கள் போன்ற படங்களை தவிர்த்தார். எப்பொழுதும் இயற்கை ஒளியில் படம்பிடிக்க நினைக்கும் இவர், அது கடவுள் தந்த ஒளி என்றும் அடிக்கடி சொல்லுவார்.

    ரொம்ப மோசம்.. அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே என்னை அழைத்தனர்.. மனம் திறந்த பிரபல நடிகை!ரொம்ப மோசம்.. அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே என்னை அழைத்தனர்.. மனம் திறந்த பிரபல நடிகை!

    நெல்லு என்ற மலையாள படத்தின் மூலம் 1974ல் சினிமாவில் கால் பதித்த இவர் மூன்றாம் பிறை படத்தின் மூலம்தான் உலகரியும் இயக்குனராக உருவானார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே பெரும்பாலும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை பேசும் படமாகவே இருக்கும். பாலுமகேந்திராவின் பிறந்த நாளான இன்று அவரின் சாதனைகளை சற்று திரும்பி பார்ப்போம்

     எதார்த்தத்தின் உச்சம்

    எதார்த்தத்தின் உச்சம்

    இவரின் "வீடு" திரைப்படம் இன்று வரை பலராலும் பேசப்படும் படமாகவே அமைந்திருந்தது. வீடு கட்டுவதற்காக எத்தனை துயரங்களை ஒரு சாதாரண குடும்பம் சந்திக்கிறது என்பதே கதைகளம் . இந்த படத்திலும் வயதான சொக்கலிங்க பாகவதர், தன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார் ஒரு வயதானவரின் ஏக்கம் எப்படியிருக்கும் என்பதை அழகாக படம் பிடித்திருப்பார் பாலு மகேந்திரா. சிறுவயதில் தன் அம்மா ஒரு வீடு கட்ட எத்தனை துயரங்களை சந்தித்தார் என்பதை மனதில் வைத்தும் இந்த படத்தை உருவாக்கினார். தன் திரை பயணத்தில் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் எடுத்த படம் வீடு தான்.

    பொக்கிஷம்

    பொக்கிஷம்

    அதை தொடர்ந்து சந்தியா ராகம் என்ற மற்றொரு எதார்த்த சினிமாவை எடுத்தார் . ஆனால் அது திரையரங்குகளில் வெளியாகவில்லை, தூர்தர்ஷன் சேனலில் மட்டும் தான் முதலில் ஒளிபரப்பானது என்ற தகவல் பலராலும் இன்று வரை சொல்ல பட்டு வருகிறது. ஆனாலும் சந்தியா ராகம் இன்று வரை பலர் மனதில் கேட்டு கொண்டே படமாகத்தான் இருக்கிறது.

     ஆழமான காதல் காவியம்

    ஆழமான காதல் காவியம்

    திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார் என்றால் அது மூன்றாம் பிறை படத்திற்காகதான் . கமல் அவர்களும் இந்த படத்திற்காகதான் தன் முதல் தேசிய விருதை பெற்றார். இப்படி பல சாதனைகளை படைத்த பாலு மகேந்திரா இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். கண்ணே கலைமானே பாடல், ஸ்ரீதேவி நடிப்பு , கிளைமாக்ஸில் ஏற்படும் பரிதவிப்பு என்று நம் மனதை எப்போதும் பாரமாக , மெல்லிய உணர்வுகளோடு புரிய வைத்து இருப்பார் மாலுமகேந்திரா. மூன்றாம் பிறை ஆழமான காதல் காவியம்.

     எதார்த்த விரும்பி

    எதார்த்த விரும்பி

    இலக்கியத்தின் வெளிப்பாடு அவரின் படங்களில் தெரியும். தன் மாணவர்களிடமும் இலக்கியம் கற்பது அவசியம் என்று அடிக்கடி சொல்லுவார். சிறுவயதிலிருந்து எதார்த்த சினிமாவை அதிகம் விரும்பி பார்த்தார். அதனால் இவர் அதிகமாக எதார்த்த சினிமாவை விரும்புகிறாரோ என்னவோ! தன் கடைசி காலம் வரை சினிமாவிற்காக தன்னை முழுதும் அர்ப்பணித்த மாமனிதர். தன் உதவி இயக்குனர்களுக்கு அவர் கற்றுத்தந்த ஒரே விஷயம் நல்ல புத்தகங்களை வாசித்தல், மனிதர்களை படித்தல் , அலட்டி கொள்ளுவது போன்ற பழக்கங்களை இவரது குழுவில் யாரிடமும் இருக்காது.

     பாலு மகேந்திரா பட்டறை

    பாலு மகேந்திரா பட்டறை

    கதை, திரைக்கதை, எடிட்டிங் மட்டுமில்லாமல் முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவளராக அறிமுகமானார்.வெற்றிமாறன், ராம், பாலா என பல பிரபலமான இயக்குனர்களும் பாலு மகேந்திரா அவர்களிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள்தான். இந்த இயக்குனர்களின் தற்போதைய படங்களை வைத்ததே நாம் புரிந்துக்கொள்ளலாம் பாலு மகேந்திரா எப்படிப்பட்ட ஆசான் என்று. இன்று வரை பல பொக்கிஷமான அவரது போட்டோக்களை அவர்களது சிஷ்யர்கள் தங்களது செல் போன் ப்ரொபைல் பிச்சராக வைத்து உள்ளனர்.

     காலத்தால் அழியாதவை

    காலத்தால் அழியாதவை

    சதி லீலாவதி , வண்ண வண்ண பூக்கள், கதை நேரம் போன்ற இவரது அற்புத படைப்புக்களை இன்று வரை மீண்டும் மீண்டும் பலரும் பார்த்து வருகின்றனர். பாலு மஹிந்திரா தமிழ் சினிமாவின் ஒரு தலை சிறந்த பிரின்சிபால் . அவரது பள்ளிக்கூடம் முதன்மையானது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அப்படி பட்ட ஒரு திறமைசாலியை இன்று பலரும் நினைவு கூர்ந்து பார்ப்பதில் பல ஜாம்பவான் இயக்குனர்களும் , வளரும் அடுத்த தலைமுறை சினிமா கலைஞர்களும் பெருமைப்படுகிறார்கள். வெகு சிலரை மட்டுமே வைத்து ஆரவாரம் இல்லாமல் , மைக் சத்தம் இல்லாமல் ஷூட்டிங் நடத்தும் பாலுமகேந்திரா இன்று வரை பலருக்கும் எதோ ஒரு பாடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். அவரது படைப்புகள் இன்னும் பல காலங்கள் பேசும் என்பது நிதர்சனமான உண்மை.

    English summary
    Director Balu Mahendra's birth day and here is a relook on the legend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X