»   »  ரெமோ... ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?

ரெமோ... ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்ல... அட இந்தாளு அப்படி என்னதான் பொம்பள வேஷத்துல சாதிக்கப் போறார் பார்க்கலாம் என மற்ற ரசிகர்களுமே ஆவலுடன் காத்திருந்த ரெமோ படம் இன்று வெளியாகிவிட்டது.

முதல் காட்சி பார்த்த பலரது கருத்தும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனுக்காக பார்க்கலாம் என்பதே.


Remo audience response

குறிப்பாக பெண் வேடத்தில் கீர்த்தி சுரேஷை விட பல இடங்களில் நன்கு ஸ்கோர் செய்கிறார் எஸ்கே எனும் சிவகார்த்திகேயன் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


படத்தில் லாஜிக் மீறல்கள், திரைக்கதையில் சில சொதப்பல்கள் இருந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் பெரிய மைல்கல் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.


படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சமமான ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள் பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவை. பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்தின் பலம் என்கிறது அனிருத்தின் ரசிகக் கூட்டம்.


சிவாவின் 4 ஆண்டு கேரியரில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஓபனிங் வசூலுடன் இன்று வெளியாகியுள்ள ரெமோ, அவரது ரசிகர்களை மட்டுமல்ல, பொதுவான ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறது என்பதே பரவலான கருத்தாக உள்ளது.


திங்களன்று தெரிந்துவிடும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

English summary
Sivakarthkeyan's much awaited movie Remo gas satisfied most of the fan all over the state.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil