»   »  'ரெமோ'வுக்காக உங்கள் மீது அம்பு விட வரும் மன்மதன்

'ரெமோ'வுக்காக உங்கள் மீது அம்பு விட வரும் மன்மதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்தின் விளம்பரத்திற்காக கியூபிட் எனப்படும் மன்மதன் சிலைகள் தமிழக தியேட்டர்களில் வைக்கப்பட உள்ளன.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்த புது புது யுக்திகளை கையாள்கிறது தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ்.

ரெமோ

ரெமோ

ரெமோ படத்தை விளம்பரப்படுத்த கியூபிட் எனப்படும் மன்மதன் சிலைகளை செய்து தியேட்டர்களில் வைக்கிறது படக்குழு. தியேட்டர்கள் தவிர்த்து மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிலைகளை வைக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

சிலைகள்

சிலைகள்

தியேட்டர்களில் வைக்க ஆயிரக்கணக்கான மன்மதன் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. சிலை தயாரிக்கும் பணி இரவும், பகலும் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் வேடம்

பெண் வேடம்

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவா பெண் வேடத்தில் மிகவும் அழகாகவும், அம்சமாகவும் உள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார்

கே.எஸ். ரவிக்குமார்

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சிவாவின் அப்பாகவும், சரண்யா பொன்வண்ணன் அம்மாவாகவும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகியுள்ளன.

English summary
Remo cupid standees will be placed in all the theatres in Tamil Nadu as part of movie promotion.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil