»   »  யூடியூப்பில் வெளியான ரெமோ, தேவி: சிவா, விஜய் அதிர்ச்சி

யூடியூப்பில் வெளியான ரெமோ, தேவி: சிவா, விஜய் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரெமோ, பிரபுதேவா நடித்த தேவி ஆகிய படங்கள் யூடியூப்பில் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஒரு படத்தை எடுத்து வெளியிடுவதற்குள் திரையுலகினர் படாதபாடு படுகிறார்கள். ஆனால் தொழில்நுட்ப காலத்தில் படம் வெளியான அன்றே இணையதளங்களில் கசிந்துவிடுகிறது. மறுநாளே திருட்டு டிவிடி வந்துவிடுகிறது.


Remo, Devi leaked on YouTube

இதனால் திரையுலகினர் கவலையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ, ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி ஆகிய படங்கள் யூடியூப்பில் வெளியாகி சம்பந்தப்பட்டவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Remo, Devi leaked on YouTube

தமிழன்டா என்று யூடியூப்பில் ரெமோ, தேவி படங்களை யாரோ வெளியிட்டுள்ளனர். யூடியூப் நிர்வாகத்தை அணுகி அந்த வீடியோக்களை நீக்கச் செய்தாலும் விஷமிகள் வேறு ஏதாவது வழியில் வெளியிடுவார்கள்.


இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றால் திரையுலகினருக்கு பெரும் தலைவலியாக மாறும்.

English summary
Miscreants leaked Sivakarthikeyan's Remo and Prabhu Deva's Devi on YouTube. Both the movies hit the screens on october 7th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil