»   »  தொடர்ச்சியான விடுமுறை... ரெமோ, தேவி, றெக்க படங்களுக்கு யோகம்தான்!

தொடர்ச்சியான விடுமுறை... ரெமோ, தேவி, றெக்க படங்களுக்கு யோகம்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறை என்பதால் நேற்று வெளியான ரெமோ, தேவி, றெக்க படங்கள் வசூலில் சக்கைப் போடு போடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய் சேதுபதி நடித்த றெக்க, விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி என மூன்று முக்கியமான படங்கள் நேற்று வெளியாகின.


Remo, Devi, Rekka hit at BO

வசூல் அளவில் மற்ற இரண்டு படங்களை விடவும் ரெமோ முந்திக்கொண்டது. அதிக திரையரங்குகளில் வெளியானதும் ஒரு முக்கிய காரணம்.


Remo, Devi, Rekka hit at BO

தேவிக்கு யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு பாசிடிவ் டாக் கிடைத்துவிட்டது. இதனால் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். இயக்குநர் விஜய், நடிகர் பிரபுதேவா இருவருக்கும் இந்தப் படம் ஒரு திருப்பு முனைதான்.


றெக்க படம் குறித்து நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், ஒரு மசாலா படத்தில் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. எனவே அவருக்கான ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்.


மூன்று படங்களின் வசூல் நிலவரம் நாளை மறுநாள் தெரிந்துவிடும்.

English summary
Remo, Devi, Rekka are getting good reception at Box Office due to continuous pooja holidays.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil