»   »  ரெமோ: பர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் தீம் மியூசிக்.. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ரெமோ: பர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் தீம் மியூசிக்.. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்தின் பர்ஸ்ட்லுக் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் 'ரெமோ'. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை '24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.


Remo First Look Released on June 9

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி வருகின்ற ஜூன் 9 ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அனிருத்தின் தீம் மியூசிக்குடன் வெளியாகவுள்ளது.


இதில் சிவகார்த்திகேயன் 3 வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


தற்போது பர்ஸ்ட்லுக்குடன் இணைந்து தீம் மியூசிக் வெளியாவது சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் #remofirstlook, #RemoThemeMusic போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அவற்றை தேசியளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

English summary
Remo First Look & Theme Music Released on June 9.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil