»   »  குழப்பிவிட்ட சிவா: இருந்தாலும் 'ரெமோ'வுக்கு வாய்ஸ் கொடுக்கும் தலைவர், தல ஃபேன்ஸ்

குழப்பிவிட்ட சிவா: இருந்தாலும் 'ரெமோ'வுக்கு வாய்ஸ் கொடுக்கும் தலைவர், தல ஃபேன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரெமோவுக்கு தலைவர் மற்றும் தல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ரெமோ. படத்தில் நடிகனாகத் துடிக்கும் சிவா பெண் வேடம் போடுகிறார். அவர் போட்டுள்ள பெண் வேடம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதிலும் கவுன் அணிந்து வரும் காட்சியை சொல்லவே வேண்டாம்.

நர்ஸ் சிவா

நர்ஸ் சிவா

படத்தில் கீர்த்தியை விட பெண் வேடத்தில் இருக்கும் சிவா அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ட்ரெய்லரில் சிவா, நம்ம தலைவரோட பேனர் மாதிரி இதே சத்யம் தியேட்டரில் நம்ம பேனரும் வரணும் என்பார் கபாலி போஸ்டரை பார்த்து.

தலைவர், தல

தலைவர், தல

நர்ஸ் வேடத்தில் இருக்கும்போது முடியை ரஜினி போன்று சிலிர்த்துவிடுவார். இது ரஜினி ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ட்ரெய்லரில் தெறிக்க விடனும் என தல அஜீத்தின் வசனத்தையும் பேசியிருப்பார். அந்த ஒரு வசனத்திற்காக சிவாவை தல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

ரெமோ

ரெமோ

ரெமோவில் சிவா தல ரசிகரா, தலைவர் ரசிகரா என்பதை தெரிந்து கொள்வதில் அஜீத், ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர் தான் தல ரசிகரா, தலைவர் ரசிகரா என்பதை தெளிவாக கூறாமல் குழப்பிவிட்டாலும் இரண்டு பேரின் ரசிகர்களும் ரெமோவுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.

ரிலீஸ்

ரிலீஸ்

ரெமோ வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது. சிவகார்த்திகேயன் துணிந்து பெண் வேடம் போட்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sivakarthikeyan's Remo has got the support of Thalaivar and Thala fans.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil