»   »  ரெமோவுக்கு இப்படியும் ஒரு விளம்பரமோ? நிஜமா சிவகார்த்திக்கேயன்

ரெமோவுக்கு இப்படியும் ஒரு விளம்பரமோ? நிஜமா சிவகார்த்திக்கேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் படத்தை விளம்பரப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் போல... இப்போது அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷுக்கு நேற்று குருவாயூர் கோயிலில் நிதின் மோகனுடன் திருமணம் கோலகலமாக நடந்தது. இந்த கல்யாணத்தை சாக்காக வைத்து நாயகன் சிவகார்த்திக்கேயனும் நாயகி கீர்த்தி சுரேசும் ரெமோ படத்தை புரமோட் செய்து விட்டதாகப் பேசிக்கொள்கின்றனர்.


மலையாள திரையுலகின் நட்சத்திரங்கள் மம்முட்டி, மோகன்லால், பிரபல நடிகைகள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கீர்த்தி சுரேஷ் அக்கா ரேவதி திரை துறையில் காஸ்ட் யூம் டிசைனராக உள்ளார்.


இந்த திருமணத்தில் பங்கேற்ற மிக முக்கிய தமிழக விஐபி ரெமோ நாயகன் சிவகார்த்திக்கேயன்தான். அதுவும் மாப்பிள்ளை கோலத்தில் கீர்த்தி சுரேஷ் பக்கத்தில் நின்று சும்மா ஜம்மென்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். இந்த மாப்பிள்ளை கெட் அப் பற்றிதான் இப்போது பேச்சாக கிடக்கிறதாம்.


திருமண விழாவில் பங்கேற்பு

திருமண விழாவில் பங்கேற்பு

அண்மையில் ராதிகா சரத்குமார் மகள் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு சிவகார்த்திகேயனின் காரில் வந்து இறங்கினார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அடுத்து வேறு காரில் தனியாக வந்து இறங்கினார் சிவகார்த்திகேயன். சும்மாவே வெறும் வாயை மெல்லும் கோடம்பாக்கத்தில் அவல் கிடைத்தால் விடுவார்களா? இப்போது கோடம்பாக்கத்தில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுதான்.


கிசுகிசு மேட்டர்

கிசுகிசு மேட்டர்

கார் மேட்டரை வைத்து டிரைலர் ஓட்டினார்கள் சிலர். இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், அடுத்த பரபரப்பு... அதாவது கீர்த்தி சுரேஷ் குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி. இதில் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் மாப்பிள்ளை கெட் அப்பில் பட்டு வேஷ்டி சட்டையில் வலம் வந்தனர்.


சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திக்கேயன்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனும் மாப்பிள்ளை கெட் அப்பில், கீர்த்தி சுரேஷ் பக்கத்தில் நின்று மணமக்களுடன் போஸ் கொடுத்தார். இது போதாதா இந்தப் படத்தை வைரலாக பரப்பி மெயின் படத்தை ரெடி செய்து வருகின்றனர். எல்லாம் சும்மா... இது ரெமாவுக்கான ஃப்ரீ விளம்பரமாக கூட இருக்கலாம் என்கின்றனர் சிலர்.


கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

கோடம்பாக்கத்தில் ஒரு பட விளம்பரத்திற்காக நாயகன் நாயகிக்கு கல்யாணம் செய்து வைத்தவர்கள் இருக்கிறார்கள். அதையே போஸ்டராக்கி விளம்பரம் செய்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது நிஜ கல்யாணத்தில் மாப்பிள்ளை கெட் அப்பில் வந்து ஹீரோயின் பக்கத்தில் நின்று போஸ் கொடுத்து பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளார் சிவகார்த்திக்கேயன் என்றும் பேசிக்கொள்கின்றனர்.


English summary
Keerthy Suresh's sister Revathy Suresh Marriage at Guruvayoor Srikrishna Temple. She known producer Suresh & Actress Menaka Suresh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil