»   »  ஆயுதபூஜைக்கு பட்டையை கிளப்ப வரும் சிவகார்த்திக்கேயனின் ரெமோ

ஆயுதபூஜைக்கு பட்டையை கிளப்ப வரும் சிவகார்த்திக்கேயனின் ரெமோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 7ம் தேதி ரெமோ படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

ரஜினி முருகன் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் மூன்று வேடத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நர்ஸ் அக்கா போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரை வெளியிடவே விழா எடுத்தார்கள்.


ரெமோவின் நர்ஸ் அக்கா பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் ரெமோ படத்தின் ரிலிஸ் எப்போது என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அந்த அளவிற்கு பர்ஸ்ட் லுக் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.


கபாலி படம் ஜூலை 22ம் தேதி ரிலீஸ் ஆவதால் பல படங்கள் தங்களின் ரிலீஸ் தேதியை அறிவிக்க யோசித்தன. இந்த நிலையில், ரெமோ படம் ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனை அதிகாரப்பூர்வமாக தங்களின் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.


English summary
#REMO worldwide release on 7th october,2016 on Pooja Holidays.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil