»   »  ரூ 45 கோடிக்குப் போன சிவகார்த்திகேயனின் ரெமோ... போட்ட பணம் வருமா?

ரூ 45 கோடிக்குப் போன சிவகார்த்திகேயனின் ரெமோ... போட்ட பணம் வருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் எந்த புண்ணியவான் ஆரம்பித்து வைத்தாரோ தெரியவில்லை... இப்போதெல்லாம் படங்களின் வியாபாரம் அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோவின் முந்தைய பட கலெக்‌ஷனை அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கிறது.

இதனாலேயே நல்ல ஹிட் கொடுத்த ஹீரோ ஆல்ரெடி நடித்துக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு சுமார் படம் மூலம் குப்புற விழுந்து கொள்கிறார். அவர் தப்பி எழுந்து வருவதற்கு படாதபாடு பட வேண்டும். முக்கியமாக வியாபார ஷோ எனப்படும் விநியோகஸ்தர்களுக்கான ஸ்பெஷல் ஷோ இப்போது கிடையவே கிடையாது. நாங்க சொல்றதுதான் ரேட்டு என்னும் அடாவடிதான் நடக்கிறது.


Remo theatrical sold out for Rs 45 cr

அப்படித்தான் சிவகார்த்திகேயனின் ரெமோவும் 45 கோடிக்கு விலை போயிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ரஜினிமுருகன் அள்ளிய கலெக்‌ஷன்தான் இது. இதை வைத்து படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 45 கோடிக்கே போயிருக்கிறது.


ரஜினிமுருகன் மெகா ஹிட் ஆக உடன் ரிலீஸான சுமாரான படங்களும் ஒரு காரணம். ஆனால் ரெமோ அப்படி அல்ல... ரெமோவுடன்தான் விஜய் சேதுபதியின் றெக்க, ஜீவாவின் கவலை வேண்டாம் ஆகியவையும் ரிலீஸ் ஆகின்றன.


தாங்குவாரா சிவா?

English summary
The Tamil Nadu theatrical rights of Sivakarthikeyan has sold out for a whopping Rs 45 cr.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil