»   »  வரிவிலக்கு பெற... ‘ரெங்கராஜன் என்கிற மோகனா’ ஆகிறது ரெமோ?

வரிவிலக்கு பெற... ‘ரெங்கராஜன் என்கிற மோகனா’ ஆகிறது ரெமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் வரி விலக்கைப் பெறுவதற்காக சிவகார்த்திக்கேயனின் ரெமோ படத்தலைப்பை ரெங்கராஜன் என்கிற மோகனா என மாற்ற படக்குழு திட்டமிட்டிருப்பதாக இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் ரெமோ. ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.


ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ரிலீசாகிறது இப்படம்.


வரிவிலக்கு...

வரிவிலக்கு...

இந்நிலையில், தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே தமிழக அரசின் வரிவிலக்கைப் பெற இயலும் என்ற காரணத்தால் இப்படத்தின் பெயரை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.


ரெங்கநாதன் என்கிற மோகனா...

ரெங்கநாதன் என்கிற மோகனா...

அதன்படி, ரெமோ என்பதன் விரிவாக்கமாக ‘ரெங்கநாதன் என்கிற மோகனா' என படப்பெயரை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. சமூக வலைதளப் பக்கங்களிலும் இந்த தகவல் வைரலாகப் பரவியது.


வதந்தி...

வதந்தி...

ஆனால், இத்தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இது வதந்தி என்றும், ரெமோ என்பது சிவகார்த்திக்கேயனின் கதாபாத்திரத்திற்கு தகுந்த பெயர், எனவே அதனை மாற்றும் திட்டமில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


அனிருத் இசை...

அனிருத் இசை...

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


English summary
Since yesterday there have been rumors doing rounds that actor Sivakarthikeyan's upcoming romantic entertainer 'Remo' has undergone for a title change due to Tax exemption concerns.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil