»   »  ரெமோ ட்ரெய்லர்: ரசிகர்களே, உங்களுக்கு வந்த அதே ஃபீலிங் வெங்கட் பிரபுவுக்கும்

ரெமோ ட்ரெய்லர்: ரசிகர்களே, உங்களுக்கு வந்த அதே ஃபீலிங் வெங்கட் பிரபுவுக்கும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ ட்ரெய்லரை பார்த்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் என்ன தெரிவித்துள்ளாரோ பல ரசிகர்களும் அதையே தான் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரெமோ. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.


ட்ரெய்லரை இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.


ட்ரெய்லர்

ட்ரெய்லர்

ட்ரெய்லரை பார்த்த பலரும் ஃபீல் பண்ணுவது என்னவென்றால் கீர்த்தி சுரேஷை விட பெண் வேடத்தில் சிவா மிகவும் அழகாக உள்ளாரே என்பது தான். இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் தெரிவித்து வருகிறார்கள்.
வெங்கட் பிரபு

இந்நிலையில் ட்ரெய்லரை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் சிவாவிடம் கூறியிருப்பதாவது, சார் செம்ம!! நர்ஸ் கதாபாத்திரத்தில் ஹீரோயினை விட அழகா இருக்கீங்க! படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளார்.


மீம்ஸ்

கீர்த்தி சுரேஷை விட சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் அழகாக உள்ளதை வைத்து வெளியிட்பட்டுள்ள மீம்ஸ்களில் ஒன்று.


சிவா

சிவா

பெண் வேடத்தில் அழகாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. ரெமோ அடுத்த மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Director Venkat Prabhu watched Remo trailer and tweeted that, 'Saar semma!! Heroine ah vida azhaga irrukeenga nurse role la!Kudos to the team! Looking forward! anirudhofficial https://twitter.com/siva_kartikeyan/status/777852138030452736 …'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil