தனுஷ், யுவன் குரல்களில் ரெண்டு ராஜா… அதிரிபுதிரியாக வெளியானது நானே வருவேன் செகண்ட் சிங்கிள்
சென்னை: தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது.
செல்வராகவன் இயக்கியுள்ள நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நானே வருவேன் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான 'ரெண்டு ராஜா' தற்போது வெளியாகியுள்ளது.

மீண்டும் இணைந்த மூவர் கூட்டணி
காதல் கொண்டேன், புதுப்பேட்டை என இரண்டு தரமான படங்களைக் கொடுத்த தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணி, தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இக்கூட்டணியில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், சைக்கோ க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை ஏற்கனவே வெளியான டீசரும் உறுதி செய்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக 29ம் தேதி நானே வருவேன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

தொடரும் யுவனின் மேஜிக்
செல்வராகவன் - யுவன் காம்போ என்றாலும், தனுஷ் - யுவன் ஆனாலும் சரி, அண்ணன், தம்பியான செல்வராகவன், தனுஷ் இருவரையுமே விட்டுக் கொடுத்ததில்லை யுவன். செல்வராகவனின் படங்களுக்கு பெரிய பலமாக யுவன் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதேபோல் தனுஷுக்கும் தரமான ஹிட் பாடல்களைக் கொடுத்து சப்போர்ட்டாக இருக்கிறார் யுவன். இந்நிலையில், மூன்றாவது முறையாக தனுஷ் - யுவன் - செல்வராகவன் கூட்டணியில் வெளிவரவிருக்கும் நானே வருவேன் படத்திலும் இசை கவனிக்க வைத்துள்ளது.

வெளியானது ரெண்டு ராஜா பாடல்
நானே வருவேன் படத்தில் இருந்து ஏற்கனவே 'வீரா சூரா' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை ரணகளப்படுத்தியிருந்தது. யுவனின் இசையில் தெறி மாஸாக வெளியான இந்தப் பாடலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வெளியான நானே வருவேன் டீசரில் பின்னணி இசையில் மிரட்டியிருந்தார் யுவன். இந்நிலையில், தற்போது செகண்ட் சிங்கிள் டிராக்கான 'ரெண்டு ராஜா' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன், தனுஷ் குரல்களில் வேற லெவல்
மிக முக்கியமாக 'நானே வருவேன்' படத்தில் இருந்து வெளியான 'ரெண்டு ராஜா' பாடலை, தனுஷும் யுவனும் இணைந்து பாடியுள்ளனர். இருவரது வாய்ஸிலும் செம்ம தாறுமாறாக உருவாகியுள்ள ரெண்டு ராஜா பாடல் ரசிகர்களை கலங்கடித்து வருகிறது. நானே வருவேஎன் படத்தின் கதையை சொல்லும் விதமாக இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. அதேபோல், 'அரக்கன் ஒருவன் இல்லையென்றால் இறைவன் மகிமை புரியாது" போன்ற வரிகள் கவனம் ஈர்த்துள்ளது. இதனால், ஒரு தனுஷ் ஹீரோவாகவும், இன்னொருவர் வில்லனாகவும் நடித்துள்ள கன்ஃபார்ம் ஆகியுள்ளது. தனுஷ், யுவன் காம்போவில் வெளியான இந்தப் பாடல், இருவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது


Click it and Unblock the Notifications











