»   »  நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே... "கெத்து" காட்டும் உதயநிதி

நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே... "கெத்து" காட்டும் உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே என தனது படம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் கெத்து. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது.


இப்படத்தில் உதயநிதியின் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.


எதிர்மறையான விமர்சனம்...

எதிர்மறையான விமர்சனம்...

இந்நிலையில், கெத்து படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதில் அளித்துள்ளார் உதயநிதி.
ரசிகர்களுக்காக...

ரசிகர்களுக்காக...

அதில் அவர், ‘நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே. ஆதரவுக்கு நன்றி.


நன்றி...

நன்றி...

விமர்சகர்களுக்கு இதுதான் பதில். குடும்பமாக வருகை தந்துள்ள பார்வையாளர்களுக்கு நன்றி.
பொதுமக்களுக்காகவே...

பொதுமக்களுக்காகவே...

பணம் பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்பவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் பொதுமக்களுக்காகவே படம் பண்ணுகிறேன்.


ஓகே... ஓகே...

ஓகே... ஓகே...

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெளியானபோது ஒரு சினிமா விமர்சகர் அதை தனது விமர்சனத்தில் கிழித்தார். ஆனால் படம் பிறகு வெற்றி பெற்ற பிறகு அவர் தனது விமர்சனத்தை நீக்கிவிட்டார்.


டுபாக்கூர் விமர்சகர்களுக்கு...

டுபாக்கூர் விமர்சகர்களுக்கு...

இந்தப் புகைப்படம், பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் எழுதுபவர்களைப் பற்றி எடுத்துரைக்கும். படத்தில் வருகிற ‘பார்' சண்டைக்காட்சியின் முதல் குத்து, பணம் வாங்கிக்கொண்டு விமர்சனம் எழுதும் டுபாக்கூர் விமர்சகர்களுக்கு' என இவ்வாறு அதில் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுவே சாட்சி...

இதுவே சாட்சி...

இது தவிர கெத்து படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் பார்க்கிங்கில் வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்பட்டுள்ள புகைப்படங்களையும், குடும்பத்தோடு மக்கள் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.


English summary
That bar fight first kick on the face is for all the paid dubakkoor so called movie critics ! #gethu sorry guys, Udhayanidhi Stalin tweeted.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil