பாலிவுட் படத்தில் நடிக்கும் பிரியா வாரியர்!- வீடியோ
திருவனந்தபுரம் : மலையாளத்தில் 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' என்கிற ஒரு பாடலில், புருவம் உயர்த்தி, கண்களை சிமிட்டி உலக ரசிகர்களை ஈர்த்தவர் புருவ அழகி பிரியா வாரியர்.
கண் அசைப்பில் இளைஞர்களை மயக்கிப்போட்ட பிரியா வாரியர் ஓவர் நைட்டில் சென்சேஷன் ஆனார். இதைத் தொடர்ந்து இவரை பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சில மில்லியன்களைத் தொட்டது.
பிரியா வாரியர் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு அவரது தந்தை தடைவிதித்துள்ளாராம். பிரியாவின் கையில் தற்போது ஒரு செல்போன் இருந்தாலும் கூட, அதில் சிம் கார்டு இல்லாததால் யாருடனும் போனில் பேசவும் முடியாதாம்.
இந்தத் தகவலை பிரியாவின் தந்தையே தெரிவித்துள்ளார். தற்போது தனது அம்மாவின் செல்போனை பயன்படுத்தித்தான் தனது நண்பர்களிடம் பேசி வருகிறாராம் பிரியா. அதிலும் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்றால் கூட, எங்கே வைஃபை இணைப்பு கிடைக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அவரது தந்தை அனுமதித்துள்ளாராம்.
'ஒரு அடார் லவ்' படத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ஸ்பான்ஸர் போஸ்டுக்கு எட்டு லட்சம் வாங்குகிறாராம். ஆனால், மொபைல் போன் பயன்படுத்த முடியாத பரிதாப நிலை.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.