»   »  'வாவ்... ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!' - ரசூல் பூக்குட்டி

'வாவ்... ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!' - ரசூல் பூக்குட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படத்தில் வரும் 3 ரீல்களுக்கான டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்த ரஜினியை பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளார் சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி.

ஷங்கரின் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு டப்பிங் பேசும் வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

Resul Pookutty amazes at the way Rajini works

டப்பிங் பணியை ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி ஒருங்கிணைத்து வருகிறார். ரஜினி தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசத் துவங்கிவிட்டார்.

Resul Pookutty amazes at the way Rajini works

3 ரீல்களுக்கான டப்பிங்கை ரஜினி ஒரே நாளில் முடித்துவிட்டார். 3 ரீல்களுக்கு டப்பிங் பேச குறைந்தது 5 நாட்களாகும். இது குறித்து ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அர்ப்பணிப்புக்கு ஈடு இல்லை. ஒரே நாளில் மூன்று ரீல்களை முடித்துவிட்டார். அவர் வேலை செய்யும் விதத்தை பார்த்து வியக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Oscar winning sound engineer Resul Pookutty tweeted that, 'The commitment&virtuosity our thalaivar superstarrajini has is unparallel.Finished three reels in one day,I'm amazed at the way he works!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil