»   »  எல்லாத்திலயும் அவசரம்: சூர்யாவை முந்திய கோஹ்லி- பிளாஷ்பேக் 2017

எல்லாத்திலயும் அவசரம்: சூர்யாவை முந்திய கோஹ்லி- பிளாஷ்பேக் 2017

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யாவை ஓவர் டேக் செய்த கோஹ்லி, ஆனால்..!!- வீடியோ

மும்பை: அதிகம் ரீட்வீட் வாங்கிய போஸ்ட் விஷயத்தில் கோஹ்லி சூர்யாவை முந்தியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் பற்றி ஏராளமானோர் ட்விட்டரில் பேசியுள்ளனர். இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட விஷயம், பிரபலங்கள், அதிக ரீட்வீட் பெற்ற ட்வீட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ட்விட்டர் நிர்வாகம்.

திருமணம்

கோஹ்லியுடனான தனது திருமணம் குறித்து அனுஷ்கா சர்மா ட்வீட்டியது இந்த ஆண்டின் கோல்டன் ட்வீட் ஆகும். அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டுகளில் இதுவும் ஒன்று.

சூர்யா

திருமணம் முடிந்த பிறகு அது குறித்து கோஹ்லி போட்ட ட்வீட் தான் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்ட் ஆகும். தானா சேர்ந்த கூட்டம் செகண்ட் லுக் குறித்த சூர்யாவின் ட்வீட்டை விட கோஹ்லியின் ட்வீட்டை அதிகம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

சல்மான்

சல்மான்

இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரலங்கள் ஷாருக்கானும், சல்மான் கானும் தான். இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார், வருண் தவான் ஆகியோரும் உள்ளனர்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகை தீபிகா படுகோனே. அவர் நடித்த பத்மாவதி சர்ச்சைகளால் ரிலீஸாகாமல் உள்ளது. இந்த பட சர்ச்சை குறித்து பலரும் ட்விட்டரில் பேசியுள்ளனர்.

டைகர் ஜிந்தா ஹை

டைகர் ஜிந்தா ஹை

ஷாருக்கான் நடித்த ரயீஸ் ஹிட்டாகவில்லை. ஆனால் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் ரயீஸ் தான். அதையடுத்து சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹை, ட்யூப்லைட் பற்றி பேசப்பட்டுள்ளது.

English summary
Anushka Sharma and Virat Kohli's fairytale wedding was undoubtedly one of the most talked about events this year and now the actor's tweet announcing her marriage to the Indian cricket captain has become the Golden tweet of the year for Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X