»   »  விவேகம் டீஸருக்கு பின்னால் ஒரு குட்டி(நானோ) கதை இருக்கு தெரியுமா?

விவேகம் டீஸருக்கு பின்னால் ஒரு குட்டி(நானோ) கதை இருக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் டீஸர் ஓடும் நேரத்திற்கு பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது என்று தெரியுமா?

Select City
Buy Vivegam (U/A) Tickets

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விவேகம். விவேகம் படத்தின் டீஸர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. படக்குழு டீஸரை வெளியிடும் முன்பே விஷமிகள் அதை லீக் செய்துவிட்டனர்.


விவேகம் டீஸரை அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


வாவ்

வாவ்

விவேகம் அஜீத்தின் 57வது படமாகும். இந்நிலையில் விவேகம் டீஸரும் சரியாக 57 வினாடிகள் ஓடுகிறது. வாவ், என்ன ஒரு ஒற்றுமை என்று நினைத்தால் அது தானாக நடந்தது இல்லை.


ரூபன்

ரூபன்

டீஸர் குறித்து எடிட்டர் ரூபன் கூறியிருப்பதாவது, விவேகம் அஜீத் சாரின் 57வது படம் என்பதால் டீஸரை 57 வினாடிகள் ஓடும்படி வைக்குமாறு ரசிகர் ஒருவர் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார். அவரின் ஐடியா பிடித்து தான் நானும், சிவா சாரும் டீஸரை அதற்கு ஏற்ப வெளியிட்டோம் என்றார்.


டீஸர்

டீஸர்

விவேகம் டீஸரை 1 நிமிடம் 4 வினாடிகள் ஓடும் வகையில் வெளியிட தான் முதலில் திட்டமிட்டார்களாம். ரசிகரின் கோரிக்கையை ஏற்று டீஸரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ரசிகர்கள்

ரசிகர்கள்

விவேகம் டீஸர் பற்றி தான் அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் திரையுலக பிரபலங்களும் அஜீத்தை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


English summary
Vivegam teaser running time coincides with Thala's 57th movie. It is no coincidence, according to editor Reuben.
Please Wait while comments are loading...