»   »  80களின் நடிகர் நடிகையர்கள் சந்திப்பு: ரஜினி, கமல் வரலையே?

80களின் நடிகர் நடிகையர்கள் சந்திப்பு: ரஜினி, கமல் வரலையே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் 1980ம் ஆண்டுகளில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு தொடர்ந்து 6வது ஆண்டாக நடைபெற்றது. செந்நிற உடையில் பங்கேற்ற நடிகர், நடிகையர்கள் தங்களின் பழைய னைவுகளை அசைபோட்டு மகிழ்ந்தனர்.

எண்பதுகளில் தொடங்கி இன்றைக்கும் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராகவும், உலகநாயகனாகவும் உயர்ந்து நிற்கும் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இம்முறை இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை.

நடிகர் நடிகையர் சந்திப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் சில நடிகர் -நடிகைகள் பொறுப்பேற்று நடத்துவது வழக்கம். கறுப்பு உடை, பீச் உடை என பல தீம்களில் உடையணிந்து கொண்டு நடிகர்கள் பங்கேற்பார்கள்.

6ம் ஆண்டு சந்திப்பு

6ம் ஆண்டு சந்திப்பு

சென்னையை அடுத்த ஆலீவ் கடற்கரை சாலையில் நீனா ரெட்டி விடுதியில் நேற்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நடிகைகள் லிசி, குஷ்பூ, சுகாஷினி ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்றிருந்தனர்.

செந்நிற ஆடையில்

செந்நிற ஆடையில்

இந்த முறை முழுக்க சிவப்பு நிறத்திலான ஆடைகள் அணிந்து கொண்டு நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிரஞ்சீவி-மோகன்லால்

தென்னக நடிகர்கள் மோகன்லால், சீரஞ்சிவி, வெங்கடேஷ் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களான ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான் ஆகியோரும் பங்கேற்றனர்.

80 நடிகர் நடிகையர்கள்

80 நடிகர் நடிகையர்கள்

நடிகர்கள் சத்யராஜ், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் பார்வதி, ஜெயசுதா ஆகியோர் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இங்கு கூடிய ஹீரோ- ஹீரோயின்கள் கூடி பழங்கதைகள் பேசி மகிழ்ந்தனர்.

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

ஆண்டுதோறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்கவில்லை.

English summary
The 6th annual gathering of the 80s happened on Saturday in Chennai. The meeting was attended by Mohanlal, Lissy, Jayaram, Parvathy, Rahman, Menaka, Sumalatha, Prabhu, Suhasini, Radhika, Revathy, Kushboo, Sobhana among many others.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil