twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெயரிலேயே தீ இருக்கு.. கமல்ஹாசன் முதல் ராஷி கன்னா வரை குவிகிறது பாராட்டு.. டிரெண்டாகும் #Revathi

    |

    சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சாட்சியம் அளித்துள்ள பெண் காவல் அதிகாரி ரேவதியை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    Recommended Video

    சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து மெளனம் கலைத்த Rajinikanth

    கூடுதலாக கொஞ்ச நேரம் கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக போலீசார் தாக்கி தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டி படைத்து வருகிறது.

    சில போலீஸ் அதிகாரிகளின் அதிகாரத் திமிர் ஒட்டுமொத்த காவல் துறை மீதும் பொது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் மாறி உள்ளது.

    திருமணம் செய்வதாகக் கூறி நடிகையை ஏமாற்றிய வழக்கு..ஜாமினில் வந்த ஒளிப்பதிவாளருக்கு மீண்டும் சிக்கல் திருமணம் செய்வதாகக் கூறி நடிகையை ஏமாற்றிய வழக்கு..ஜாமினில் வந்த ஒளிப்பதிவாளருக்கு மீண்டும் சிக்கல்

    டிரெண்டாகும் ரேவதி

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விடிய விடிய ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை லத்தியால் அடித்து காவலர்கள் சித்ரவதை செய்த உண்மையை அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மேஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பது பலரது மனங்களையும் வென்று இருக்கிறது. #Revathi என்ற ஹாச்டேக்கை போட்டு ரேவதியின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    மனசாட்சியோடு சாட்சி

    மனசாட்சியோடு சாட்சி

    "சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்." என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

    நீதி வென்றிட

    "நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன்... உங்களோடு தேசம் துணை நிற்கிறது... #Revathi" என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் பதிவிட்டுள்ளார்.

    நம்பிக்கை கொடுத்திருக்கீங்க

    "மதிப்புக்குரிய நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி. புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தைரியமான தலைமை பெண் காவலர் ரேவதி ஆகிய நீங்கள் அனைவரும் எடுத்துள்ள பெருமுயற்சி ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் உங்கள் பின்னால் நிற்போம்" என இயக்குநர் வெற்றிமாறன் பதிவிட்டுள்ளார்.

    ராஷி கன்னா

    சூர்யாவின் அருவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நடிகை ராஷி கன்னா, தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க டிவீட் போட்டு தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். "உங்கள் துணிச்சலும், தைரியமும் தான், இன்னமும் நீதி உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. உங்களை பார்த்து பெருமைப்படுகிறோம்" என பதிவிட்டுள்ளார்.

    English summary
    ”Your bravery and courage instills our faith in justice! Thankyou #Revathi for voicing the truth. You are an inspiration & we are all proud of you!” celebrities praise Police officer Revathi’s brave act.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X