»   »  'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?

'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேவதி மேடம் ஒரு நடிப்பு ராட்சசி என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கியுள்ள ப. பாண்டி படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் ஹீரோவான ராஜ்கிரண் இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ஜீன்ஸ் எல்லாம் போட்டு ஸ்டைலாக உள்ளார்.


இந்நிலையில் இது குறித்து ராஜ்கிரண் கூறுகையில்,


தனுஷ்

தனுஷ்

பவர் பாண்டி ஒரு ஸ்டண்ட் மாஸ்டர். என் கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் பாண்டி கதாபாத்திரத்திற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்றார் தனுஷ்.


அவதாரம்

அவதாரம்

நான் கூச்ச சுபாவம் உள்ளவன். அதனால் நடிகன் ஆவேன் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. பவர் பாண்டி படத்தில் ஜீன்ஸ், லெதர் ஜாக்கெட் போட்டு புல்லட் ஓட்டினேன். இந்த மாதிரி என்னை தனுஷ் பார்க்க விரும்பினார்.
இயக்குனர்

இயக்குனர்

இயக்குனர் தனுஷ் என்னை பிரமிகக வைத்துவிட்டார். செட்டில் அவர் மிகவும் கூலாக இருப்பார். மிகவும் திறமைசாலி. அனைவரையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்.
ரேவதி

ரேவதி

ரேவதி மேடமுடன் சேர்ந்து நடித்தது சவாலாக இருந்தது. அவர் ஒரு நடிப்பு ராட்சசி. அவர் கவுரவத் தோற்றம் தான் என்றாலும் அவரின் நடிப்பு வேற லெவல். அவருடன் சேர்ந்து நடிக்கும்போது பதட்டமாக இருந்தது என்றார் ராஜ்கிரண்.


English summary
Rajkiran said that acting with Revathy in Dhanush directorial debut Pa. Paandi was challenging. He called her as nadippu rakshasi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil