»   »  புதிய படத்தில் 'தல' ஸ்டைலில் 'சால்ட் அன்ட் பெப்பர்' லுக்கில் ஆமீர் கான்

புதிய படத்தில் 'தல' ஸ்டைலில் 'சால்ட் அன்ட் பெப்பர்' லுக்கில் ஆமீர் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடிக்கும் புதிய படத்தில் 'தல' அஜீத் போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்.

ஹாலிவுட்டில் ஹீரோக்கள் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிக்க தயங்குவது இல்லை. அதிலும் ஜார்க் க்ளூனிக்கு தான் சால்ட் அன்ட் பெப்பர் லுக் அம்சமாக உள்ளது என்று பலர் கூறுகிறார்கள். கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் தங்களுக்கு வயதானாலும் டை அடித்து கருப்பு முடியுடன் நடிக்கவே விரும்புகிறார்கள். இந்நிலையில் தான் அஜீத் குமார் தில்லாக நரை முடியுடன் நடிக்கத் துவங்கினார்.

அவரது சால்ட் அன்ட் பெப்பர் அதாவது நரைமுடி கெட்டப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஆமீர்

ஆமீர்

பி.கே. படத்தை அடுத்து ஆமீர் தங்கால் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் அவர் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை.

சால்ட் அன்ட் பெப்பர்

சால்ட் அன்ட் பெப்பர்

ஆமீர் கான் தனது சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக தங்கால் படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்.

தங்கால்

தங்கால்

பிரபல குத்துச்சண்டை வீரர் மஹாவீர் போகத்தின் வாழ்க்கை வரலாறு தான் தங்கால் படத்தின் கதை. குத்துச்சண்டை வீராங்கனைகளான கீதா, பிபதாவின் தந்தை தான் மஹாவீர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்சம்

அம்சம்

இத்தனை நாட்களாக ஆமீர் கிளீன் ஷேவ் செய்து, கருப்பு முடியுடன் தான் நடித்துள்ளார். இந்த படத்தில் நரைமுடி, ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசையுடன் அழகாக உள்ளார் ஆமீர். அஜீத்தை போன்று ஆமீருக்கும் சால்ட் அன்ட் பெப்பர் லுக் அம்சமாகவே உள்ளது.

English summary
Aamir Khan is sporting salt and pepper look in his upcoming movie Dhangal.
Please Wait while comments are loading...