»   »  ஜனவரி 23ம் தேதி "திருமதி.ராகுல்" ஆகிறார் அசின்...சினிமாவிற்கு டாட்டா பை பை!

ஜனவரி 23ம் தேதி "திருமதி.ராகுல்" ஆகிறார் அசின்...சினிமாவிற்கு டாட்டா பை பை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை அசின் அடுத்தாண்டு ஜனவரி 23ம் தேதி தொழில் அதிபர் ராகுலை மணக்க இருக்கிறார். திருமணத்திற்குப் பின் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அசின். கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்தவர்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்திக்கு பறந்தார்...

இந்திக்கு பறந்தார்...

அசின் நடித்த கஜினி திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்தி ரீமேக்கில் நடிப்பதற்காக பாலிவுட் பறந்த அசின், தொடர்ந்து அங்கு படவாய்ப்புகள் அமைய அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.

காதல்...

காதல்...

இந்நிலையில் கஜினி படத்தில் வருவது போல் நிஜவாழ்க்கையிலும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன உரிமையாளர் ராகுல் சர்மாவுடன் அசினுக்கு காதல் மலர்ந்தது. சுமார் 4 வருடக் காதலைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

திருமணம்...

திருமணம்...

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டார் சம்மதித்தனர். அதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கடந்த மாதம் நடைபெற இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அப்போது திருமணத்தை நடத்தாமல் தள்ளி வைத்து விட்டனர்.

ஜனவரி 23ம் தேதி...

ஜனவரி 23ம் தேதி...

இந்நிலையில் தற்போது அசினின் திருமண தேதி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, தற்போது நடிகர்-நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

சினிமாவிற்கு முழுக்கு?

சினிமாவிற்கு முழுக்கு?

திருமணத்துக்குப் பிறகு அசின் சினிமாவை விட்டு விலக திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிப்பது போல் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

வேலை பார்த்தது போதும்

வேலை பார்த்தது போதும்

இதுகுறித்து முன்பு அவர் கூறுகையில், "14 வயதிலிருந்தே வேலை பார்த்து வருகிறேன். போதும். இனி என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மட்டுமே பார்க்கப் போகிறேன் "என்று தெரிவித்திருந்தார்.

English summary
Wedding bells are not far anymore as Asin is reportedly getting married to Micromax founder Rahul Sharma on January 23 next year, reports Mumbai Mirror.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil