»   »  காதலியின் கொலையாளியை வேட்டையாடும் அஜீத்..! லீக் ஆனதா 'என்னை அறிந்தால்' பட கதை?

காதலியின் கொலையாளியை வேட்டையாடும் அஜீத்..! லீக் ஆனதா 'என்னை அறிந்தால்' பட கதை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாக உள்ள என்னை அறிந்தால் திரைப்படத்தின் கதை கசிந்துள்ளது.

அஜித் நடித்து வெளியாக உள்ள என்னை அறிந்தால் திரைப்படத்தில், அனுஷ்கா, திரிஷா ஆகியோரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஹாரீஷ் ஜெயராஜ் இசைமைத்த பாடல்கள் ஏற்கனவே பட்டையை கிளப்பி வருகின்றன.

இம்மாதம் ரிலீசாவதிலும் சிக்கல்

இம்மாதம் ரிலீசாவதிலும் சிக்கல்

என்னை அறிந்தால் திரைப்படம் வரும் 29ம்தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தை தணிக்கை செய்வதில் சென்சார் போர்டு காலம் தாழ்த்தி வருவதால், இம்மாதம் படம் ரிலீசாவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் வருமா?

அடுத்த மாத தொடக்கத்தில் வருமா?

இம்மாதம் படம் ரிலீசாகாவிட்டால், பிப்ரவரி 5ம்தேதி படம் வெளியாகும் என்று தெரிகிறது. இருப்பினும் படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

கிட்டத்தட்ட மூன்று மணிநேர படம்

கிட்டத்தட்ட மூன்று மணிநேர படம்

இந்நிலையில் ஐரோப்பாவை சேர்ந்த ஒரு வெப்சைட்டில், என்னை அறிந்தால் படத்தின் கதை லீக் ஆகியுள்ளது. அந்த வெப்சைட் தகவல்படி, என்னை அறிந்தால் மொத்தம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக்கூடிய படம் என்று தெரியவருகிறது.

காவலனின் காதலி

காவலனின் காதலி

கதை முழுவதும் அஜித்தை சுற்றியே நடக்கிறது. ஸ்ட்ரிக்ட் போலீஸ் அதிகாரியாக உள்ள அஜித்தின் காதலி திடீரென கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார், எப்படி அஜித் கண்டுபிடித்தார் என்பதுதான் கதையின் கரு.

கிளைமாக்சில் திடுக்..

கிளைமாக்சில் திடுக்..

கதையின் கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம் நிறைந்ததாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தே ஆர் வெய்ட்டிங்..

தே ஆர் வெய்ட்டிங்..

கவுதம் சார்.. அஜித் ரசிகர்கள் ஆசைப்படுறபடி, சீக்கிரம் படத்தை வெளியே கொண்டுவாங்க, இல்லைன்னா இப்படித்தான் திடீர்.. திடீருன்னு கதையோட குரூப்புங்க கிளம்பிருவாங்க.. அப்புறம் கதை என்னோடதுன்னும் ஒரு குரூப் கிளம்பும் பாத்துக்கங்க.

English summary
A UK based website has shared some interesting facts about Ajith's upcoming film Yennai Arindhaal. The ticket booking website has revealed the run time of Yennai Arindhaal to be 2 hours and 53 minutes and also the synopsis of the film.
Please Wait while comments are loading...