»   »  படமே பார்க்காதவங்கதான் கபாலிக்கு முதல் நாள் விமர்சனம் எழுதினவங்க!

படமே பார்க்காதவங்கதான் கபாலிக்கு முதல் நாள் விமர்சனம் எழுதினவங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவா சினிமா விமர்சனங்கள் போட்டா பெருமாபலானவங்க 'ஸ்டெயிட்டா ஸ்க்ரோல்' பண்ணி கடைசி பாராவ மட்டும்தான் படிப்பாங்க.

மத்த போஸ்ட மட்டும் என்ன முழுசாவா படிக்கிறாங்க அவ்வ்... நாம சொல்றது எல்லாருக்கும் ஒத்துப் போகாது. ஒத்துப் போகணும்னு அவசியமும் இல்லை.

நாம போடுறது மட்டும் இல்லை மற்ற விமர்சகர்கள் போடுற விமர்சனங்கள் எல்லாமே அவங்களோட சொந்தக் கருத்துதான். ஏன் நாளிதழ்கள்ல வெளியாகுற விமர்சனங்கள் கூட ஏதோ ஒருத்தரோட சொந்தக் கருத்து தான். அத படிக்கிற யார் யாருக்கு அந்த கருத்து ஒத்துப் போகுதோ அவங்களுக்கு அது நல்ல விமர்சனமாகவும், மத்தவங்களுக்கு நல்லா இல்லாத மாதிரியும் தோணும்.

Reviews, Critics and Piracy

நாம நல்லாருக்குன்னு சொன்ன பல படங்கள் மண்ணக் கவ்விருக்கு. அதே மாதிரி தர மொக்கைன்னு சொன்ன படங்கள் பட்டைய கெளப்பிருக்கு. உதாரணத்துக்கு அயன் சுத்தமா புடிக்கல. சிங்கம் 2 மொக்கையா தெரிஞ்சிது. ஆனா சூர்யாவுக்கு இது ரெண்டும் தான் அதிக கலெக்சன் எடுத்த படங்கள். அதே மாதிரி மரியான் புடிச்சிருந்துச்சி, படம் மரண மட்டை. எல்லாருக்கும் ஒரே விஷயம் புடிக்கனும்னு அவசியமும் இல்லை

இதுல அத விட தமாசான விஷயம் என்னன்னா, நாம தரை ரேட்டுன்னு சொன்ன படத்த சில பேரு வீட்டுல டிவிடில பாத்துட்டு "அவ்வளவு மோசமால்லாம்" இல்லியே மச்சிங்கவேண்டியது. ங்கொய்யால.. வீட்டுல உக்காந்து பாட்டையெல்லாம் ஓட்டிர வேண்டியது. சீன் மொக்கையா இருந்தா லைட்டா ஒட்டிர வேண்டியது. ஃபைட்டு கூட கொஞ்சம் பெருசா இருந்தா அதையும் ஓட்டிர வேண்டியது. ரெண்டரை மணி நேர படத்த முக்கா மணி நேரத்துல பாத்துட்டு அவ்வளவு மோசமில்லையேங்க வேண்டியது. ரெண்டரை மணி நேரம் அத்தனை மொக்கையையும் தாங்கிட்டு வெளியவும் போகமுடியாம உள்ளயும் இருக்க முடியாம சிக்கி செதைஞ்சி பாருங்கப்பா... அப்ப தெரியும் அதோட வலி.

அதே மாதிரி நல்ல படங்களும் அப்டித்தான். ஒரு காமெடிய தியேட்டர்ல என்ஜாய் பண்றதுக்கும் வீட்டுல உக்காந்து தனியா பாக்குறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. படங்களோட காட்சிங்க பெரும்பாலானது நம்மள தியேட்டர் ஆடியன்ஸா நினைச்சிதான் வைக்கிறாங்க. இத வீட்டுல உக்காந்து வீட்டுக்காரம்மா கிட்ட திட்டு வாங்கிட்டே உர்ர்ர்ன்னு பாத்துட்டு சிரிப்பு வரலைன்னா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்.

நோகாம நோம்பு கும்பிட்டு இதுல ஆயிரம் குறை வேற. கவுண்டர் சொல்ற மாதிரி "எடுக்குறது பிச்சை..பேசுறது எகத்தாளமா?" மொதல்ல தியேட்டர்ல படத்த பாருங்க. அப்டி இல்லைன்னா இல்லைன்னா விஜய் மாதிரி "ஐ ஆம் வொய்ட்டிங்" ன்னு இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணுங்க.

தியேட்டர்ல படம் பார்க்கிறவங்களுக்குதான் அந்த படத்து மேல எல்லா உரிமையும் உண்டு. இன்னும் சொல்லப்போனா தியேட்டர்ல படம் பாக்குற எல்லாருமே அந்தப் படத்தோட ஒரு ஷேர் ஹோல்டர் மாதிரி. அவங்களுக்கு அந்தப் படத்தப் பத்தி எந்தவித கருத்து சொல்றதுக்கும் உரிமை இருக்கு. கோச்சடையான் நல்லால்லைன்னு சொல்றவனுங்கள்ள முக்கால்வாசி பேரு இன்னும் படத்த பாக்காதவிங்கதான். கபாலிக்கு மொத நாளே விமர்சனம் எழுதின அவசரக் குடுக்கைகளும் படத்தின் சில சீன்களை திருட்டு வீடியோல பாத்ததுங்க... அல்லது பாக்காமயே எழுதனதுங்கதான்... அல்லது வைரமுத்து மாதிரி வயித்தெரிச்சல்ல பாக்காமலே கருத்து சொன்னாங்க.

ஒரு படத்த பாக்குறதும் பாக்காததும் உங்க விருப்பம். அது உங்களுக்கு புடிக்கிதா புடிக்கலையாங்குறதும் உங்களை பொறுத்தது தான். ஆனா முடிஞ்ச வரைக்கும் தமிழ்ப் படங்களை தியேட்டர்ல பாருங்க. இல்லை டிவிடிலதான் பாப்பேன்னா வாயா மூடிட்டு பேயாம உட்காந்திட்டுருங்க!

English summary
Muthu Siva's sarcastic criticisms on film critics and reviews.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil