»   »  ரோபோ, கபாலியில் ரஜினியை விட அமிதாப் நடித்தால் சூப்பர்.. மறுபடியும் வாலாட்டும் ராம் கோபால் வர்மா

ரோபோ, கபாலியில் ரஜினியை விட அமிதாப் நடித்தால் சூப்பர்.. மறுபடியும் வாலாட்டும் ராம் கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் யாரையாவது வம்புக்கு இழுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது அவரிடம் சிக்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகியுள்ள Te3n படத்தை பார்த்த வர்மா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் சும்மா இல்லாமல் ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார்.

அமிதாப் பச்சன்

Te3n படத்தில் அமிதாப் பச்சனின் அருமையான நடிப்பை பார்த்த பிறகு அவர் ரான் போன்ற படங்களில் நடித்து நேரத்தை வீணாக்கக் கூடாது என்பதே என் கருத்து என ட்வீட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.

சிரஞ்சீவி

தெலுங்கில் சிரஞ்சீவியாக இருக்கட்டும், தமிழில் ரஜினியாக இருக்கட்டும் அனைத்து மொழிகளில் நடிக்கும் ஸ்டார்களும் அமிதாப் பச்சனை புரிந்து வைத்துள்ளனர். அவருக்கு தான் அவரை பற்றி தெரியவில்லை.

எந்திரன்

ரோபோ படத்தில் அமிதாப் பச்சன் நடித்தால் அது நன்றாக போகும். அதே சமயம் ரஜினிகாந்த் Te3n படத்தில் நடித்தால் அது சரியாக ஓடாது என்பது ஒரு ரஜினி ரசிகனான எனது நம்பிக்கை.

ரஜினி

அமிதாப் பச்சன் பற்றி நான் கூறியுள்ளதை ரஜினி சார் கூட மறுக்க மாட்டார். Te3N, பிளாக், பிக்கு உள்ளிட்ட படங்களில் ரஜினி நடித்தால் அது காமெடியாகிவிடும்.

பதில் சொல்லுங்க

சூப்பர் ஸ்டார் ரஜினி Te3n படத்தில் நடித்தால் அதற்கு 1 மதிப்பெண்ணும், கபாலி படத்தில் அமிதாப் நடித்தால் அதற்கு 100 மதிப்பெண்களும் கிடைக்கும். இது குறித்து ரஜினியிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

English summary
Director Ram Gopal Varma has compared Rajinikanth with Amitabh Bachchan in twitter which irks the superstar fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil