»   »  தமிழ் நண்டு மட்டும் அல்ல தெலுங்கு நண்டும் காலை வாரும்: இந்த இயக்குனர் தான் உதாரணம்

தமிழ் நண்டு மட்டும் அல்ல தெலுங்கு நண்டும் காலை வாரும்: இந்த இயக்குனர் தான் உதாரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உலகமே பிரபாஸை கொண்டாடும் போது இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஏனோ அவர் மீது காட்டமாக உள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது. இதை பார்த்து பாலிவுட்டின் மூன்று கான்களும் மிரண்டு போயுள்ளனர்.

ஆளாளுக்கு பிரபாஸை பாராட்டி வரும் நேரத்தில் இயக்குனர் ராம் கோபால் வர்மா மட்டும் வேறு விதமாக ட்வீட்டியுள்ளார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி கபூர் ஏன் பாகுபலி 2 படத்தில் நடிக்க மறுத்தார் என்று வியக்கிறேன்? அவரின் கெரியருக்கு இந்த படம் பேருதவியாக இருந்திருக்கும் என்று ட்வீட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.

பிரபாஸ்

ஸ்ரீதேவி மட்டும் பாகுபலி 2 படத்தில் நடித்திருந்தால் பிரபாஸை விட அதிக கிரெடிட் அவருக்கு தான் சென்றிருக்கும் என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ரம்யா

யாராலும் ரம்யா கிருஷ்ணனை அடித்துக் கொள்ள முடியாது. நல்ல வேளை ஸ்ரீதேவி பாகுபலி படித்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டுக்கு ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடிக்க ஸ்ரீதேவியிடம் தான் முதலில் கேட்டுள்ளார் ராஜமவுலி. அம்மணி ஓவராக சம்பளம் கேட்டதால் ரம்யா கிருஷ்ணனை வைத்து படத்தை முடித்துவிட்டனர்.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'If SrideviBKapoor did Bahubali2 she would have gotten more credit than Prabhas it being her very next film after English Vinglish.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil