»   »  ஜெ-சசி உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்டுவேன்: இது ஆர்ஜிவி சபதம்

ஜெ-சசி உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்டுவேன்: இது ஆர்ஜிவி சபதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சசிகலா பற்றிய தனது படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா இடையேயான உண்மையான உறவை வெளிச்சம் போட்டு காட்டப்போவதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார்.

சசிகலா என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

உறவு

ஜெயலலிதா, சசிகலா இடையேயான உறவு குறித்த உண்மையை போயஸ் கார்டன் பணியாட்கள் என்னிடம் கூறியது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. அதை என் படத்தில் காட்டுவேன்.

சசிகலா

சசிகலா படம் சசிகலாவின் பின்னால் மற்றும் முன்னால் இருக்கும் கதையை காட்டும். இதை மன்னார்குடி மாபியா உறுப்பினர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

டான்

மன்னார்குடி மாபியா குடும்பத்தின் டான் விடோ சசிகலா கார்லியோனி...இதை அவர் மறுக்கக் கூட மாட்டார்.

ஜெ. ஆன்மா

ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா இருக்கும் சிறை அறக்கு வரும் என்று எனக்கு தோன்றுகிறது என்று ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Director Ram Gopal Varma tweeted that, 'Truth behind Jayalalitha and Sasikala relationship,what Poes garden servants told me is unimaginably shocking and I wil show it in my film.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil