»   »  ஷகீலா பயோபிக்கில் இவங்கதான் ஹீரோயின்!

ஷகீலா பயோபிக்கில் இவங்கதான் ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷகீலா- வீடியோ

சென்னை: தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் தொடங்கி நாடு கடந்தும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை ஷகீலா.

தனக்கு 16 வயது இருக்கும்போது சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அவரின் வாழ்க்கையை படமாக இந்திரஜித் லங்கேஷ் எடுக்கிறார். இப்படத்தில் ஷகீலாவாக பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கவுள்ளார்.

ஷகீலா

ஷகீலா

கேரளாவைச் சேர்ந்த பிரபலமான கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

கவர்ச்சி நடிகை

கவர்ச்சி நடிகை

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி பட நாயகியாக நடித்து 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரிச்சா சத்தா

ரிச்சா சத்தா

இந்தப் படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். ரிச்சா சத்தா மாடலாக சினிமாவில் நுழைந்து நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்திலும் நடித்திருக்கிறார் ரிச்சா.

ஷூட்டிங்

ஷூட்டிங்

16 வயதில் சினிமாவில் நுழைந்த ஷகீலாவின் சினிமா வாழ்க்கையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் துவங்க இருக்கிறதாம்.

Read more about: shakila biopic ஷகீலா
English summary
Bollywood actress Richa Chadda to star in Shakeela's biopic will be directed by Indrajith lankesh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil