For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கரெக்ட் பாயின்ட் பேசுனா ஓடிடுவாரு ரியோ.. வச்சு வெளுத்த அனிதா.. கத்தி தன் இமேஜை கெடுத்த ரியோ!

  |

  சென்னை: போரிங் போட்டியாளர் என அர்ச்சனா கேங்கால் தேர்வு செய்யப்பட்ட அனிதா சம்பத், கண்ணாடி சிறைக்குள் அடைக்கப்பட்டார்.

  இன்றைய முதல் புரமோவில் கண்ணாடி சிறைக்குள் தன்னைப் பூட்டியது தவறு என ரியோ ராஜிடம் வாதாடினார் அனிதா சம்பத்.

  அர்ச்சனா அக்கா அவங்க அப்பா பத்தி சொன்னதும் அழுது அந்த இடத்தையே போர் ஆக்கியது உங்களுக்கு தெரியலையா என வச்சு விளாசி விட்டார் அனிதா.

  ஹவாய் பீச்சில் பிகினியில் சுற்றிய ஹீரோயின்.. வைரலாகும் த்ரோபேக் போட்டோ.. வசமாக வர்ணிக்கும் ரசிகாஸ்!

  ஜெயிலில் கேப்டன்

  ஜெயிலில் கேப்டன்

  ரியோ ராஜை தொடர்ந்து இந்த வாரம் கேப்டனாக இருக்கும் அனிதா சம்பத்தை போரிங் போட்டியாளர் என ஜெயிலுக்குள் ஹவுஸ்மேட்ஸ் தள்ளி விட்டனர். கூடவே சேர்த்து ஜித்தன் ரமேஷையும் மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பி விட்டனர். அனிதா தன்னை வேண்டும் என்றே டார்கெட் பண்ணி அவுட் ஆக்க பார்க்கின்றனர் என்கிற குற்றச்சாட்டை அர்ச்சனா கேங் மீது வலுவாக வைத்துள்ளார்.

  அர்ச்சனா அழுதது

  அர்ச்சனா அழுதது

  கண்ணாடி அறைக்குள் அடைபட்ட கன்னுக்குட்டி அனிதா, ரியோ ராஜை கேள்விக் கணைகளால் துளைத்துள்ள அதிரடியான புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ச்சனா அக்கா அவங்க அப்பா பத்தி நிஷா அக்கா பேசியவுடன் அழுது அந்த இடத்தையே போரிங் ஆக்கவில்லையா, அவங்களை ஏன் நாமினேட் பண்ணல எனக் கேட்டு விளாசி உள்ளார்.

  இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு

  இரண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு

  புடிக்கலன்னு சொல்றதுக்கும் போரிங்குக்கும் வித்தியாசம் இருக்கு என அனிதா சம்பத் கேள்விக்கு ரியோ விளக்கம் அளித்தார். நல்லா ட்ரை பண்ண நிஷா அக்கா பெஸ்ட் பர்ஃபார்மர், கேப்டன்சியில ஜெயிச்ச நான் வொர்ஸ்ட் பர்ஃபார்மரா என அனிதா கேட்க, கேப்டன்சி வச்சு நான் சொல்லவே இல்லை என ரியோ ஜகா வாங்குகிறார்.

  எல்லாத்தையும் சேர்த்துத்தான் சொல்லணும்

  எல்லாத்தையும் சேர்த்துத்தான் சொல்லணும்

  உடனே கடுப்பான அனிதா சம்பத், எல்லாத்தையும் சேர்த்து வச்சித்தான் சொல்லணும், அப்பன்னா நீங்க தப்பா சொல்லியிருக்கீங்க என ரியோவிடம் கை நீட்டி எகிற, தேங்க்யூ அனிதா என வழக்கம் போலவே பாயின்ட் பேச முடியாமல் ரியோ அங்கிருந்து நகர்ந்து செல்லும் புரமோ வைரலாகி வருகிறது.

  ஓடிடுவாரு ரியோ

  ஓடிடுவாரு ரியோ

  வாரம் ஃபுல்லா நடந்ததை வச்சித்தான் சொல்லணும், பத்தியா.. கரெக்ட் பாயின்ட் பேசுனா ஓடிடுவாரு.. இதுதான் ரியோ என ரியோவை டோட்டல் டேமேஜ் பண்ணி விட்டார் அனிதா சம்பத். இப்போ யாரு ஜெயிலுக்குள் தண்டனை அனுபவிக்கிறா, யாரு வெளியே அனுபவிக்கிறான்னே தெரியலையே என ரசிகர்கள் ரியாக்‌ஷன் அதகளம் செய்து வருகின்றனர்.

  ஐ எம் நாட்

  ஐ எம் நாட்

  நேற்றைய எபிசோடிலேயே சோலோ பர்ஃபார்மர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி என எல்லாரையும் அனுப்பிட்டு, இவங்க கும்பலா ஃபைனல்ஸ்க்கு போக பிளான் பண்றாங்கன்னு சொன்ன அனிதா, நீங்க உங்க பிரெண்ட்ஸ்களுக்காகத்தான் விளையாடுறீங்க என்கிற குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன் வைக்க, ஐ எம் நாட்.. ஐ எம் நாட் என குரலை உசத்தி, அனிதாவை பயமுறுத்தும் தொனியில் ரியோ கத்தும் புரமோ வைரலாகி வருகிறது. இன்னைக்கு சிறப்பான கச்சேரி இருப்பது கன்ஃபார்ம்.

  English summary
  Anitha Sampath not accepted housemates gave her boring performer of the week. She raised questions to Rio Raj and cornered him with valued points.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X