Just In
- 12 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 12 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 14 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 15 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Automobiles
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த வார கேப்டன் யாரு.. இந்த முறையும் சோம் சொதப்பல்.. இந்த வாரம் கண்டிப்பா கிளம்ப வேண்டியதுதான்!
சென்னை: சுவாரஸ்யமான போட்டியாளராக அன்பு கேங்கை சேர்ந்த ரியோ, சோமசேகர் மற்றும் ஆஜீத் தேர்வு செய்யப்பட்டு தலைவர் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த வாரமாவது சோமசேகர் ஜெயித்து கேப்டன் ஆவார் என்று பார்த்தால், மீண்டும் சொதப்பல்.
ஆஜீத்தை காப்பாற்ற ஹவுஸ்மேட்கள் எடுத்த முயற்சியும் வீணானது. கேபி கூட போட்டி வச்சா மட்டும் தான் ஜெயிப்பார் போல என நெட்டிசன்கள் விளாசல்.

கேப்டன் போட்டிக்கு
அடுத்த வாரம் கேப்டன் யார் என்கிற போட்டிக்கு ஹவுஸ்மேட்களால் ரியோ, சோமசேகர் மற்றும் ஆஜீத் நாமினேட் செய்யப்பட்டனர். கேப்டன் என்கிற வார்த்தையை யார் முதலில் எடுக்கிறார்களோ அவர் தான் அடுத்த வார கேப்டன் என்கிற மொக்கை டாஸ்க் கொடுக்கப்பட்டது. மூவரும் களமிறங்கி போட்டியிட்டனர்.

சொதப்பிய சோம்
இந்த வாரமாவது கேப்டனாக சோமசேகர் ஆக வேண்டும் என நினைத்து ஹவுஸ்மேட்கள் சோமசேகருக்கு அதிக ஓட்டுக்கள் போட்டு அவரை நாமினேட் செய்தனர். ஆனால், படு மொக்கையாக விளையாடி தனக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பையும் சோம் தவறவிட்டார். இதுவரை ஒரு முறை கூட சோம் தலைவராகவில்லை.

டைட்டிலுக்கு தகுதியில்லை
இப்போது இருக்கும் போட்டியாளர்களில் இதுவரை கேப்டன் ஆகாமல் இருப்பது சோமசேகரும், கேபியும் தான். அந்த அளவுக்கு ஒரு முறை கூட கேப்டன் டாஸ்க்கில் இவர்கள் வெற்றியே பெறவில்லை. பாலா சொல்வதை போலவே நிஜமாவே கடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பது சோம் தான் போல, சிறைக்கும் செல்லவில்லை. கேப்டனும் ஆகவில்லை. இருவருக்கும் டைட்டில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

கிளம்புங்க ஆஜீத்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், ஆஜீத் தான் வெளியேறுவார் என்பது நூறு சதவீதம் உறுதியாகி உள்ளது. இத்தனை வாரங்கள் அவர் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம். ஷிவானியையும் சேர்த்தே அனுப்பினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் விரும்பி வருகின்றனர். அடுத்த வாரம் கேப்டனாக ஆஜீத்தை மாற்றி சேவ் செய்ய ஹவுஸ்மேட்கள் எடுத்த முயற்சியும் வீண் ஆனது.

ஹாட்ரிக் கேப்டன்
பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக ரியோ கேப்டன் ஆகியுள்ளார். சோமுக்காக ரியோ விட்டுக் கொடுத்து எல்லாம் விளையாடவில்லை. குரூப்பாக இருந்தாலும், தனக்கான ஆட்டத்தை மட்டுமே விளையாடுவதில் குறியாக இருந்து வரும் ரியோ, கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்று அடுத்த வார தலைவர் ஆகிவிட்டார்.

இறுதிச்சுற்றுக்கு ரியோ
இன்னும் இரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அடுத்த வாரம் ரியோ கேப்டன் ஆன காரணத்தால், விஜய் டிவி அவரை அழகாக இறுதிச்சுற்றுக்கு அனுப்பி வைக்கிறது. ஃபைனல்ஸுக்கு ரியோ போகும் பட்சத்தில் இந்த சீசன் டைட்டிலையும் ரியோவுக்கே விஜய் டிவி கொடுக்கப் போகிறதா? இல்லை ரம்யாவுக்கு கொடுக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.