Don't Miss!
- News
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
‘காந்தாரா' இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை.. மகிழ்ச்சியில் படக்குழு!
சென்னை : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படம் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.
காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது.
நிஜத்தில் ஓர் 'காந்தாரா'...குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்திய அனுஷ்கா ஷெட்டி!

காந்தாரா கதை
ஒரு அரசன் மன நிம்மதி தேடி காட்டுக்குள் செல்கிறான், அப்போது காட்டுப்பகுதி மக்கள் ஒரு தெய்வத்தை வழிபடுவதை பார்த்து மெய்மறந்து அந்த தெய்வத்தை தனக்கு தரும்படி கேட்கிறார். அதற்கு பதிலாக அந்த தெய்வம், என் குரலின் சத்தம் எவ்வளவு தூரம் கேட்கிறதோ அவ்வளவு நிலத்தையும் எங்கள் மக்களுக்கு தரவேண்டும் என கேட்கிறது.

நிலத்தைக் காப்பாற்றும் தெய்வம்
தெய்வத்திற்காக பல ஏக்கர் நிலத்தை அந்த காட்டுப்பகுதி மக்களுக்கு எழுதி கொடுத்துவிடுகிறான் அரசன். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து வந்த அரசன் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை அப்பகுதி மக்களிடம் இருந்து பறிக்க நினைக்கிறான், அப்போது அந்த தெய்வம் அவனை கொன்றுவிடுகிறது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதே நிலத்தை மக்களிடமிருந்து பறிக்க நினைக்க அரசன் வழிவந்த ஒருவன் நினைக்க தெய்வம் மீண்டும் தோன்றி நிலத்தை காப்பாற்றுகிறது.

மகத்தான வசூல்
திரையரங்கிற்கு அதிக ரசிகர்களை வரவைத்த திரைப்படம் என்ற பெருமை காந்தாரா படத்திற்கு கிடைத்தது. கர்நாடக மாநிலம் மங்களுர், உடுப்பி போன்ற தெற்கு கடலோரப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் வழிபடக்கூடிய கிராம தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதால், அப்படம் அனைவருக்கும் பிடித்துப்போனது.

2 பிரிவுகளில் தகுதி பெற்ற காந்தாரா
காந்தாரா படம் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு கடைசி நேரத்தில் அனுப்பப்பட்ட நிலையில், காந்தாரா திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என இரண்டு பிரிவுகளில் பரிந்துரைப் போட்டியில் இடம் பெற தகுதி பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 301 திரைப்படங்களில் காந்தாரா திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விருதை வெல்லுமா?
இந்நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆஸ்கார் விருதுக்கு தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தி காஷ்மீர் பிலிம்ஸ், கங்குபாய் கதியவாடி, ஆர்.ஆர்.ஆர், காந்தாரா பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஜனவரி 24ந் தேதியே எந்த படம் விருதை வெல்லும் என்பது தெரியவரும்.