800 கோடி.. ராஷ்மிகா படத்தை பின்னுக்குத்தள்ளிய காந்தாரா சாப்டர் 1.. ஆங்கிலத்திலும் ரிலீஸ் ஆகப்போகுது!
பெங்களூர்: ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், 2025 ஆம் ஆண்டில் உலகளவில் ₹800 கோடியைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 'சாவா' திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படமாக இது உருவெடுத்துள்ளது.
ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் ₹809 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ளது. இந்த வசூல் சாதனை, மற்ற முக்கியப் படங்களை பின்னுக்குத் தள்ளி 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தை முதலிடத்தில் வைத்துள்ளது.

விக்கி கெளஷல், ராஷ்மிகா மந்தனா நடித்த சாவ்வா திரைப்படம் தான் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய படமாக இருந்த நிலையில், ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 அந்த சாதனையை முறியடித்துள்ளது.

809 கோடி வசூல்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கைப்படி, ஹோம்பலே ஃபிலிம்ஸ், 'காந்தாரா சாப்டர் 1' முதல் இரண்டு வாரங்களில் உலகளவில் ₹717 கோடி வசூலித்ததாகக் குறிப்பிட்டது. மூன்றாவது வாரத்தில், இந்தியாவில் ₹38 கோடி நிகர வசூலையும், உலகளவில் ஆறு நாட்களில் ₹92 கோடி மொத்த வசூலையும் ஈட்டியது. இதன் மூலம் மொத்த வசூல் ₹809 கோடியை எட்டியது. இது 'சாவ்வா' திரைப்படத்தின் லைஃப்டைம் வசூலான ₹807 கோடியை முறியடித்தது.
இந்தியாவில் மெகா வசூல்: முதல் வார வசூல் விவரங்கள்: முதல் நாள் ₹61.85 கோடியும், இரண்டாம் நாள் ₹45.40 கோடியும், மூன்றாம் நாள் ₹55.00 கோடியும், நான்காம் நாள் ₹63.00 கோடியும், ஐந்தாம் நாள் ₹31.50 கோடியும், ஆறாம் நாள் ₹34.25 கோடியும், ஏழாம் நாள் ₹25.25 கோடியும், எட்டாம் நாள் ₹21.15 கோடியும் வசூலித்து, மொத்தமாக முதல் வாரத்தில் ₹337.40 கோடி ஈட்டியுள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வார வசூல்: ஒன்பதாம் நாள் ₹22.00 கோடி, பத்தாம் நாள் ₹39 கோடி, பதினோராம் நாள் ₹39 கோடி, பன்னிரண்டாம் நாள் ₹13.35 கோடி, பதிமூன்றாம் நாள் ₹13.50 கோடி, பதினான்காம் நாள் ₹10.5 கோடி, பதினைந்தாம் நாள் ₹9 கோடி, பதினாறாம் நாள் ₹8.50 கோடி, பதினேழாம் நாள் ₹12.75 கோடி, பதினெட்டாம் நாள் ₹17 கோடி, பத்தொன்பதாம் நாள் ₹11.65 கோடி, இருபதாம் நாள் ₹11.75 கோடி, இருபத்தொன்றாம் நாள் ₹10.25 கோடி, இருபத்தி இரண்டாம் நாள் ₹6 கோடி (மதிப்பீடு) என மொத்தமாக ₹563.50 கோடி வசூலித்துள்ளது.
முதலிடத்தில் காந்தாரா: 2025 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 'காந்தாரா சாப்டர் 1' முதலிடத்திலும் 'சாவ்வா' 2ம் இடத்திலும் என முன்னிலை வகிக்கின்றன. மோஹித் சூரி இயக்கத்தில் வெளியான 'சையாரா' உலகளவில் ₹576 கோடி வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ரஜினிகாந்த் நடித்த 'கூலி' ₹500 கோடிக்கு மேல் வசூலித்து நான்காவது இடத்திலும், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான 'வார் 2' ₹365 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இந்த ஆண்டின் அதிக வசூல் படங்கள்: ₹300 கோடிக்கு மேல் வசூலித்த மற்ற குறிப்பிடத்தக்கப் படங்களில் 'மஹாவதார் நர்சிம்ஹா', 'OG', மற்றும் 'லோகா அத்தியாயம் 1' ஆகியவை அடங்கும். இந்திப் படங்களில், அமீர் கான் நடித்த 'சிதாரே ஜமீன் பர்' மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. இது மோகன்லால் நடித்த 'L2: எம்புரான்' படத்திற்கு அடுத்தபடியாக உள்ளது. தமிழில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் கூலி, குட் பேட் அக்லி, டிராகன், விடாமுயற்சி, டியூட், தலைவன் தலைவி மற்றும் மதராஸி உள்ளிட்ட படங்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் வெளியாகிறது: காந்தாரா சாப்டர் 1 படம் 125 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், இதுவரை 809 கோடி ரூபாய் சாதனை உலகளவில் படைத்துள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதி ஆங்கிலத்திலும் படம் வெளியாக போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆங்கில வெர்ஷனில் வெளியானால், படத்தின் வசூல் 1000 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











