Kantara Chapter 1 collection day 2 : வசூலை வாரிசுருட்டிய காந்தாரா சாப்டர் 1.. இரண்டாம் நாள் வசூல்!

சென்னை: ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள "காந்தாரா சேப்டர் 1" திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு வெளியான "காந்தாரா" படம் கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பின் டப்பிங் செய்யப்பட்டு வெயிடப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படம் திரைப்படம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் பேனரில் விஜய் கிரகந்தூர் மற்றும் சாலுவே கவுடா ஆகியோர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க, அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த்,ஜெயராம், குல்ஷன் தேவையா,பிரமோத் ஷெட்டி, ரகேஷ் பூஜாரி, பிரகாஷ் துமினாட் ஆகியோர் நடித்துள்ளனர்.

Kantara Chapter 1 box office 1
Photo Credit:

படத்தின் கதை: காந்தாரா சாப்டர் 1 படத்தின் கதை என்னவென்றால் காந்தாரா மலைப்பகுதியில் கடவுள் பார்வதி தேவி சிவன் நிம்மதியாக தவம் செய்வதற்கு ஈஸ்வர பூந்தோட்டம் இடத்தை உருவாக்கினார். அந்த இடத்தில் சிவன் தவம் செய்ததாக காந்தாரா பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த இடத்தில் மிளகு, ஏலக்காய், தேன், பட்டை போன்றவை கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் தெய்வ சக்தியும் இருப்பதால், அந்த இடத்தை தெய்வ சக்தி கல்லை அடைய வேண்டும் என இரண்டு குழுக்கள் நிலைக்கின்றன. அது மட்டுமல்லாமல் பாந்தோரா மன்னனும் நினைக்கிறார். இதனால், காந்தாரா பகுதி மக்களுடன் பெரும் படைகளை திரட்டி போரிடுகிறான் இந்த போரில் காந்தாரா மக்களை தெய்வம் காப்பாற்றியதா? இல்லையா? என்பதுதான் இந்த திரைப்படத்தில் கதை.

அட்டகாசமான நடிப்பு : பட ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருந்ததால் படம் எந்த இடத்திலும் சோர்வடையாமல் விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக ரிஷப் ஷெட்டியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது குறிப்பாக அவர் மீது சாமி வரும் காட்சியில் படம் பார்த்தவர்களுக்கே மெய்சிலிர்த்துவிட்டது இதற்காக ரிஷப் ஷெட்டி கடுமையாக உழைத்து இருப்பது படத்தில் நன்றாக தெரிகிறது. ருக்மினி அழகிலும் திறமையிலும் படத்தில் ஜொலிக்கிறாள்.

இரண்டாம் நாள் வசூல்: அக்டோபர் 2ந் தேதி வெளியான இப்படம், முதல் நாளில் உலக அளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்தது. குறிப்பாக, கர்நாடகாவில் ரூ.26 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.13 கோடி, தமிழ்நாட்டில் ரூ.5.5 கோடி, கேரளாவில் ரூ.5.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.4 கோடி வசூலித்தது. வெளிநாடுகளில் இதன் வசூல் ரூ.3 கோடி ஆக இருந்தது. Sacnilk தகவலின் படி இரண்டாம் நாளான நேற்று, "காந்தாரா சேப்டர் 1" உலகம் முழுவதும் ரூ.45 கோடி வசூலித்து, மொத்த வசூலை ரூ.105 கோடியாக உயர்த்தியுள்ளது. இந்த வசூலைத் தொடர்ந்து, திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிரபார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X