Kantara Chapter 1 Box Office Day 4 - பாக்ஸ் ஆஃபிஸில் காந்தாரா சாப்டர் 1 கெத்து.. 4 நாளில் 300 கோடி வசூலா?
சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் கடந்த இரண்டாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் பான் இந்தியா அளவில் ஹிட்டடித்தது. எனவே இப்படத்தின் மீதும் ஹைப் எக்கச்சக்கமாக இருந்தது. சூழல் இப்படி இருக்க காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் வசூலில் கெத்து காண்பித்துவருகிறது.
க்ரிக் பார்ட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரிஷப் ஷெட்டியை பான் இந்தியா அளவில் பிரபலப்படுத்தியது காந்தாரா திரைப்படம். கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் கன்னட திரையுலகத்தாலும் ஒரு பான் இந்தியா வெற்றியை கொடுக்க முடியும் என்று ஆணித்தரமாக நிரூபித்து மற்ற மொழி திரையுலகை ஆச்சரியப்படுத்தியது அந்தப் படம்.
காந்தாரா சாப்டர் 1: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு காந்தாரா படத்தின் முன் கதையாக அதன் இரண்டாவது பாகத்தை உருவாக்கினார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா சாப்டர் 1 என்று பெயர் வைக்கப்பட்டது. ஷூட்டிங்கின்போது படக்குழு ஏகப்பட்ட விபத்துக்களை சந்தித்திருந்தாலும்; மனம் தளராமல் ஷூட்டிங்கை முடித்தார் ரிஷப் ஷெட்டி. படமானது கடந்த இரண்டாம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.

சூப்பர் வரவேற்பு: இதில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இதன் முதல் பாகம் ஏற்கனவே பெரிய ஹிட்டாகியிருந்ததால் இதுவும் அதே ரிசல்ட்டை பெறுமா என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே படம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. ரிஷப் ஷெட்டியின் மேக்கிங், நடிப்பு, படத்தின் பிரமாண்டம், இசை என அத்தனை ஏரியாக்களிலும் படம் சொல்லி அடித்திருக்கிறது.
அதிக பட்ஜெட்: காந்தாரா படத்தின் முதல் பாகம் 16 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு பெரிய லாபத்தை ஈட்டியது. இந்தப் படமோ கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் காந்தாரா சாப்டர் 1 வசூல் ரீதியாகவும் பின்னியெடுப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நான்காவது நாள் வசூல்: இப்ப்டம் முதல் நாளில் 61 கோடி ரூபாயும் இரண்டாவது, மூன்றாவது நாளில் முறையே 45.4, 55 கோடி ரூபாயும் வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நான்காவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்து அந்த தளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி விடுமுறை தினமான நேற்று அந்தப் படம் 61 கோடி ரூபாயை வசூலித்து; இந்தியாவில் மொத்தம் 235 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும்; உலகம் முழுவதும் 300 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











