Kantara Chapter1 OTT: ரூ 800 கோடி வசூலை அள்ளிய காந்தாரா சாப்டர் 1.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி, அவரே நடித்திருக்கும் 'காந்தாரா சேப்டர் 1' திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியப் படமாகும், இது சாவாவின் ₹807 கோடி வசூலை முறியடித்துள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் 25 நாட்களில் உலகளவில் ₹813 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் 2022 ஆம் ஆண்டில் வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் ப்ரீக்வெல் ஆகும். ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், பல்வேறு மொழிகளில் பான் இந்தி திரைப்படமாக வெளியானது. ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியானது. இது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்தது. 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும், அது முதல் பாகத்தின் ப்ரீக்வெலாக இருக்கும் என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார்.

Kantara Chapter 1 OTT 1 OTT
Photo Credit:

காந்தாரா சாப்டர் 1: காந்தாரா திரைப்படம் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, உலக அளவில் சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இது ரிஷப் ஷெட்டிக்கு தேசிய அளவில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. தற்போது 'காந்தாரா சாப்டர் 1' வெளியாகி முதல் பாகத்தை விடவும் பெரிய அளவில் வசூலை ஈட்டி உள்ளது. அண்மையில் ரிஷப் ஷெட்டி அளித்த பேட்டியில், நாம் பார்ப்பது காந்தாரா 2 அல்ல, அது காந்தாராவின் முதல் பாகம். கதை என்னவென்றால், காந்தாரா படத்தின் இறுதிக் காட்சியில் வருவதுதான் முதல் பாகம். அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணி என்னவென்று நான் விளக்க வேண்டியிருந்தது. அதனால்தான், அது முதல் பாகமாக உருவானது என்று ரிஷப் ஷெட்டி கூறியிருந்தார்.

வசூலை அள்ளியது: இப்படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் பேனரில் விஜய் கிரகந்தூர் மற்றும் சாலுவே கவுடா ஆகியோர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க, அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த்,ஜெயராம், குல்ஷன் தேவையா,பிரமோத் ஷெட்டி, ரகேஷ் பூஜாரி, பிரகாஷ் துமினாட் ஆகியோர் நடித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நடக்கும் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி, 25 நாட்களில் ₹813 கோடி வசூலி அள்ளியது.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளதால், அக்டோபர் 31ந் தேதி இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தேதிகளில் வெளியாக உள்ளது. இந்தி மற்றும் மற்ற மொழிகளிலும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது என ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் டீசருடன் வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X