For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பூரண நலத்துடன் நாடு திரும்பிய ரிஷி கபூர் வரவேற்கும் பாலிவுட் திரையுலகம்

  |
  பூரண நலத்துடன் நாடு திரும்பிய ரிஷி கபூர் வரவேற்கும் பாலிவுட் திரையுலகம்-வீடியோ | Rishi Kapoor returns to India after treatment

  மும்பை: புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ரிஷி கபூர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து கடந்த 11ஆம் தேதியன்று மும்பை திரும்பினார். அவரது வருகையை ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமே கொண்டாடி வருகிறது.

  தந்தை ராஜ் கபூர் நடிப்பில் வெளியான மேரா நாம் ஜோக்கர் என்ற இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு 1973ஆம் ஆண்டில் வெளியான பாபி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்.

  Rishi Kapoor back India. Celebrating Bollywood Industry

  இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றியவர். தற்போது முன்னணி பாலிவுட் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் இவரது மகன் ரன்பீர் கபூர். 67 வயதான ரிஷி கபூர் கடந்த ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு தனது மனைவியும் நடிகையும் ஆன நீத்து கபூருடன் சென்றிருந்தார்.

  அவர் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது பாலிவுட் நடிகர்களான அனுபம் கேர், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், அமீர்கான், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் உடல் நலம் விசாரிப்பதற்காக ரிஷி கபூரை நேரில் சந்தித்துள்ளனர்.

  பிக்பாஸ்... ரோடு சைட் ரோமியோக்களாக வலம் வரும் யோகி பாபு கூடவே ராமரும்பிக்பாஸ்... ரோடு சைட் ரோமியோக்களாக வலம் வரும் யோகி பாபு கூடவே ராமரும்

  பலமுறை அவர் தனது தாய் நாடான இந்தியாவிற்கு திரும்புவதில் விருப்பம் தெரிவித்து வந்தார். எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தனது வாழ்த்தினை பதிவு செய்வதில் முதன்மையானவர் ரிஷி கபூர். தாய்நாடு மீது மிகுந்த பற்றுடையவர்.

  அவர் தனது பிறந்த நாளுக்கு முன்னரே இந்தியா திரும்புவார் என்று அறிவித்த நிலையில் ஒரு வருட சிகிச்சைக்கு பிறகு நேற்று காலை மும்பை திரும்பியுள்ளார் ரிஷி கபூர். அவரது வருகையை ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமே கொண்டாடி வருகிறது. அவரது வருகை பற்றிய செய்தி பரவி வரும் நிலையில் தொழில்துறை சார்ந்தவர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

  கபூர் குடும்பமே ரிஷி கபூரின் வருகையால் கொண்டாட்டத்தில் உள்ளது. நீத்து கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகிய தங்க நிற பலூன் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் வெல்கம் ஹோம் டேட் என்று பொறிக்கப்பட்டிருந்தது. ரிஷிகபூரின் மகள் ரித்திமா கபூர் சாஹினி மற்றும் ரன்பீர் கபூரின் ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.

  அதற்கு ரிஷி கபூர் இந்த பலூன் மிகவும் சாதாரணமாக இருந்தாலும் அதில் என் குடும்பத்தின் அன்பு நிறைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தார். மேலும் இத்தனை நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார். அவரது முகத்தில் இருக்கும் புன்னகையே அவர் தாய் நாடு மீதும் நடிப்பு மீதும் கொண்டுள்ள ஆர்வம் தெரிகிறது. அவர் கூடிய விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பழைய நிலையை அடைய வாழ்த்துக்கள்.

  English summary
  Actor Rishi Kapoor, who was diagnosed with cancer in the United States, returned to Mumbai on September 11 after recovering fully. His arrivalis celebrating the entire Bollywood industry.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X